தென்கொரிய எலெக்ட்ரானிக் நிறுவனமான LG தனது மொபைல் பிஸினஸை முழுவதுமாக மூடப்போவதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏப்ரல் ஐந்து அன்று வரும் என்று கூறப்படுகிறது
2015ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து தொடர்ந்து 23 காலாண்டுகளிலும் நஷ்டமே. இதுதான் நிறுவனம் மூட மிக முக்கியக் காரணம். உலக ஸ்மார்ட் போன் சந்தையில் LG நிறுவனத்தின் பங்கு 2% மட்டுமே.இந்த வருடம் ஜனவரியில் இருந்தே இந்த விஷயம் புகைந்துக் கொண்டிருந்தது. முதலில் தனது மொபைல் பிஸினஸை விற்க முடிவு செய்து Google, Facebook, Volkswagen and Vietnam’s Bean Group நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தொழில்நுட்ப விஷயங்கள் ,பேடண்ட் போன்ற பிரச்சனைகளால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
மொபைல் பிஸினஸில் இருக்கும் 4000 தொழிலாளர்களையும் ஹோம் அப்லையன்ஸ் டிவிசனுக்கு மாற்றிவிட்டார்கள் எனவும் செய்தி வருகிறது. எனவே LG மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால் வாங்க வேண்டாம்.