Mcafee – Mobile Security

மொபைல் பாதுகாப்பிற்கு உபயோகம் ஆகும் செயலிகள் பற்றி பலரும் கேட்கிறார்கள். ஜியோ சிம் வாங்கியதில் இருந்து ஜியோ செக்யூரிட்டி செயலியை பயன்படுத்தி வருகிறேன். இதுவரை பிரச்சனை இல்லை. ஆனால் அது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. எனவே மற்றவர்களும் பயன்படுத்துபவர்களை உபயோகப்படுத்த வசதியாக மற்ற செயலிகளை பார்ப்போம். இன்று Mcafee செயலியை பற்றி பார்ப்போம். இதில் நான் எழுதுவது முழுக்க இலவச வசதிகளை பற்றி மட்டுமே. அனைத்து செக்யூரிட்டி செயலிகளிலும் இலவச வசதி மற்றும் காசு கொடுத்து பயன்படுத்தும் வசதி என இரண்டு உண்டு. ஆனால் Mcafee செயலியின் இலவச வசதிகள் அதிகம் இருப்பதால் இது எனக்கு பிடித்திருந்தது.

Mcafee
Mcafee

செயலியில் நுழைந்தவுடன் டேஷ் போர்ட். அதன் வலது பக்கம் மேலே இருக்கும் 3 கோடுகளை தொட்டால் செயலியில் இருக்கும் பல்வேறு ஆப்ஷன்களை பார்க்கலாம் . ஸ்கேன் செட்டிங்ஸ் , மெம்மரி பூஸ்டர், Anti theft, பேட்டரி பூஸ்டர் என பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. அதே போல் நீங்கள் இணைந்திருக்கும் வயர்லெஸ் கனெக்ஷன் பாதுகாப்பானதா எனவும் சோதித்து கொள்ளலாம்.

ஸ்கேன் ஆப்ஷனை கொண்டு நீங்கள் எந்த நேரத்திற்கு உங்கள் மொபைலை ஸ்கேன் செய்ய விரும்புகிறீர்கள் என செட் செய்துகொண்டால் தினமும் அந்த நேரத்தில் ஸ்கேன் செய்து முடிவுகளை சொல்லிவிடும். இதில் உள்ள இன்னொரு வசதி நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் செயலிகள் எந்த அளவிற்கு உங்கள் மொபைலில் இருந்து டேட்டா எடுக்கின்றன ( App privacy Guard) என்று சொல்லிவிடும்.

செயலியில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு சென்றால் பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. அவை கீழே

கட்டண சேவைகள்

Mcafee செயலியின் கட்டண சேவைகளில் முக்கிய மூன்று வைஃபை செக்யூரிட்டி, இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களுக்கு நீங்கள் செல்லாதவாறு ப்ளாக் செய்தல், செயலிகளை லாக் செய்தல் என பல்வேறு வசதிகள் உள்ளன. நீங்கள் விரும்பினால் கட்டணம் செலுத்தி அதை பெற்று கொள்ளலாம். மாத கட்டணம் / வருடாந்திர கட்டணம் என இரண்டு வசதிகள் உள்ளன. அதிலும் Standrd / Plus என்று இரண்டு திட்டங்கள் உள்ளன. கீழே உள்ள படத்தில் இரண்டிலும் உள்ள வசதிகள் உள்ளன. அடுத்த கட்டுரையில் மற்றுமொரு செக்யூரிட்டி செயலியை பார்ப்போம்.

Related news

About Author