வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்களின் மிகப்பெரிய பிரச்சனை அதில் சுற்றில் இருக்கும் போலி செய்திகள் மட்டுமல்ல, ஒரே செய்திகள் திரும்ப திரும்ப சுற்றில் விடப்படுவது. இதில் இரண்டாவது விஷயம் பெரிய பிரச்சனை அல்ல. முதல் விஷயம் பல சமயங்களில் பிரச்சனை கிளம்ப ஏதுவாக உள்ளது. ஏற்கனவே இந்த போலி செய்திகள் பரவுவதை தவிர்க்க, அதிகம் பார்வேர்ட் ஆன செய்திகளை ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மேல் பார்வேர்ட் செய்ய முடியாத அளவு தடை ( Message forward restriction) இருந்தது. இப்பொழுது இதிலும் மாறுதல் கொண்டுவந்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். அது என்ன என்று பார்ப்போம்.
Message forward restriction
நேற்று வாட்ஸ் அப் பீட்டா ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கான செயலியில் 2.22.7.2 அப்டேட் வந்தது. அதில்தான் இந்த புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைலில் வாட்ஸ் அப் பீட்டா செயலியை உபயோகப்படுத்தினால் செயலியை அப்டேட் செய்துவிட்டு இதை முயற்சித்து பார்க்கவும்.
இந்த அப்டேட்டிற்கு பிறகு அதிகம் பார்வேர்ட் செய்யப்பட்ட செய்தியை ( டெக்ஸ்ட் / வீடீயோ / படம் ) ஒரே ஒருவருக்கோ அல்லது ஒரே ஒரு குழுவிற்கு மட்டுமோ தான் ஒருமுறையில் அனுப்பப்படும். ஒன்றிற்கு மேற்பட்டவருக்கு அனுப்ப விரும்பினால் மீண்டும் தனியாகத்தான் அனுப்பவேண்டும். அதாவது அதிகம் பார்வேர்ட் செய்யப்பட்ட செய்தியை 5 பேருக்கு அனுப்ப விரும்பினால் ஐந்து முறை தனித்தனியாக அனுப்ப வேண்டும். இதனால் இந்த பார்வேர்ட் மெசேஜ்களும் போலி செய்திகளும் குறையும் என எதிர்பார்ப்போம்.
ஒன்றிற்கு மேற்பட்டவருக்கு அனுப்பும் பொழுது கீழ்க்கண்ட மெசேஜ் வரும்