சென்ற வருடம் அறிமுகப்படுத்திய In 1b மொபைல் போனை தொடர்ந்து இப்பொழுது இந்த In சீரியசில் தனது அடுத்த மொபைலை மைக்ரோமேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Micromax In 2b என்ற இந்த மொபைல் ஜூலை 30 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 6ம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் இணையதளத்திலும் , மைக்ரோமேக்ஸ் இணையத்தளத்திலும் விற்பனைக்கு வருகிறது.
4 GB மற்றும் 6 GB என்று இரண்டுவிதமான RAM வேரியக்ஷனில் வருகிறது. 4 ஜிபி மாடல் Rs.7,999/- மற்றும் 6 ஜிபி மாடல் Rs.8,999/- க்கும் கிடைக்கும் எனத் தெரிகிறது. கருப்பு, நீலம் மற்றும் பச்சை கலர்களில் கிடைக்கும். முக்கியமான விஷயம், எந்தவித ப்லோட்வேர் செயலியும் இல்லாமல் கிட்டத்தட்ட நேட்டிவ் ஆன்ட்ராய்ட் 11 உடன் வருகிறது இந்த மொபைல்.
Micromax In 2b specifications
Display: | 6.52-inch HD+ waterdrop-style notch display |
Chipset: | Unisoc T610 octa-core SoC |
Variants: | 4GB+64GB and 6GB+64GB |
Rear Camera: | 13MP primary sensor with an f/1.8 aperture and a 2MP secondary sensor |
Front Camera: | 5MP camera on the front housed in a waterdrop-style notch. |
Battery: | 5,000mAh battery |
Software: | Android 11 out-of-the-box |
Colors: | Black.blue and Green |