மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 11ன் டெவலப்பர் பதிப்பை வெளியிட்டதில் இருந்தே விண்டோஸில் இருக்கும் மென்பொருட்களின் UI விண்டோஸிற்கு ஏற்றவாறு இருக்குமாறு மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது மைக்ரோசாஃப்ட்டின் ப்ரவுஸரான எட்ஜ் பிரவுசரின் ஸ்க்ரால் (scroll bars ) பார்களை சிறிது மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றம் விண்டோஸ் 11ல் மட்டுமல்லாது விண்டோஸ் 10 உபயோகம் செய்தாலும் காண இயலும்.
இந்த மாற்றம் இப்பொழுதைக்கு எட்ஜ் பிரவுசரின் எட்ஜ் கேனரி பதிப்பில் மட்டுமே வந்துள்ளது. இந்த கேனரி பதிப்பு என்பது மிக மிக ஆரம்பக்கட்ட பதிப்பாகும். அநேகமாய் தினமும் அப்டேட் வரும். இந்த பதிவை இன்ஸ்டால் செய்ய இந்த லிங்கிற்கு செல்லவும்.
இந்த புதிய ஸ்க்ரோல் பார் , overlay scroll bar என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். எட்ஜ் கேனரி பிரவுசரின் அட்ரஸ் பாரில் edge://flags என்று டைப் செய்யவும். பின்பு வரும் ஆப்ஷனில் “overlay scrollbars” தேடவும். வரும் ஆப்ஷனில் “enable ” தேர்வு செய்யவும். அதன் பின் பிரவுசரை ரீ ஸ்டார்ட் செய்தால் scroll பார் மாற்றத்தை காணலாம்.

