New updates to Signal App

வாட்ஸ் அப் பிரைவசி பிரச்சனையால் சிக்னல் செயலி இன்ஸ்டால் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது சிக்னல் செயலி. கீழே கொடுத்துள்ள வசதிகள் அனைத்தும் இப்பொழுது “பீட்டா டெஸ்டர்” களுக்கு மட்டுமே வந்துள்ளவை. இதில் முக்கியமானது ஒவ்வொரு சாட் விண்டோவ்க்கும் தனித்தனி வால் பேப்பர் உபயோகப்படுத்தும் வசதி. இதை சமீபத்தில்தான் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.

எப்படி வால் பேப்பர் செட் செய்வது ?

  1. எந்த சாட் விண்டோவில் வால் பேப்பர் செட் செய்யவேண்டுமோ அதை ஓபன் செய்துகொள்ளவும்
  2. தனிப்பட்ட சாட் விண்டோ எனில் “வலது மேல் மூலையில்” உள்ள புள்ளிகளை தொட்டு அதில் “Conversation Settings “ தேர்வு செய்யவும். இதுவே க்ரூப் எனில் “group settings” தேர்வு செய்யவும்.
  3. பின் வரும் ஆப்ஷன்களில் “Chat Wallpaper ” தேர்வு செய்து கொள்ளவும்.
  4. அதன் பின் “Set Wallpaper ” தேர்வு செய்யவும்.
  5. வெறும் கலர் பின்னணி போதுமென்றால் அங்கே தந்துள்ள கலர்களில் ஒன்றை தேர்வு செய்யவும். இல்லையெனில் “choose from photos ” தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான போட்டோவை தேர்வு செய்துகொள்ளுங்கள்
  6. படத்தை “blur ” செய்ய வேண்டுமெனில் கீழே இடது மூலையில் உள்ள ஆப்ஷனை தேர்வு செய்யவும். இல்லையெனில் ” Set Wallpaper ” தேர்வு செய்துவிட்டு வெளியே வரவும் . இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த படமோ அல்லது நிறமோ பின்னணியில் வந்திருக்கும் .

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.