மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 பதிப்பில் பெரிதாய் இதுவரை எந்த புதிய மாற்றங்களையும் கொண்டு வரவில்லை. அதே போல் விண்டோஸ் அடுத்த பதிப்பும் எப்பொழுது வரும் என்று எந்த வித அறிகுறியும் இல்லை. இப்பொழுது புதிதாய் ஒரு வசதியை விண்டோஸ் 10ல் கொண்டு வந்துள்ளது. நாம் மொபைலில் கூகிள் நியூஸ் படிப்பது போல் விண்டோஸ் டெஸ்க்டாப்பில் இருந்தே செய்திகளின் சுருக்கமான விவரங்களை இனி படிக்க இயலும். News and Interests என்ற இந்த புதிய வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் இன்னும் அனைவருக்கும் அப்டேட் ஆகவில்லை. அநேகமாய் இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் அப்டேட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News and Interests எப்படி பார்ப்பது ?
முதலில் விண்டோஸ் அப்டேட் பேஜ் சென்று அப்டேட் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து அப்டேட் செய்து கொள்ளவும். உங்களுக்கு இந்த feature அப்டேட் ஆகி இருந்தால் உங்கள் டெஸ்க்டாப் டாஸ்க்பாரின் வலது பக்கம் டைம் இருக்கும். அதற்கு முன்பு ” வெதர் ஐகான் ” வந்திருக்கும். அதை க்ளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ பாப் அப் ஆகும். அதில் சமீபத்திய செய்திகள் ஹெட்லைன் ,வெதர் அப்டேட் , போக்குவரத்து போன்றவை இருக்கும். எந்த செய்தியை படிக்க விரும்புகிறீர்களோ அதை க்ளிக் செய்தால் உங்கள் பிரவுசரில் அந்த செய்தி லிங்க் ஓபன் ஆகும்.


உங்கள் பீட் எடிட் செய்ய விரும்பினால் அந்த பாப் அப் விண்டோவின் வலது மேல் பக்க மூலையில் இருக்கும் “edit interests ” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்கள் பிரவுசரில் தனி பக்கம் வரும். அதில் நீங்கள் எந்த மாதிரி செய்திகளை பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

அதே போல் “ News and Interests” பகுதி எப்படி டாஸ்க்பாரில் வரவேண்டும் என்பதை , டாஸ்க்பாரில் ரைட் க்ளிக் செய்தால் வரும் ஆப்ஷன்களில் தேர்வு செய்துகொள்ளலாம். உங்களுக்கு இந்த வசதி வேண்டாம் என்றால் அங்கே சென்று அதை நிறுத்தி விடலாம்.

இந்த புதிய வசதியில் இன்னும் சில தவறுகள் உள்ளன. உதாரணத்திற்கு டாஸ்க் பார் டெஸ்க்டாப்பின் கீழ் பகுதியில் இருக்கும் பொழுது மட்டுமே இந்த வசதி வேலை செய்கிறது. ஸ்க்ரீனின் மேல் பக்கமோ வலது அல்லது இடது பக்கம் மாற்றினாலோ வேலை செய்வது இல்லை.
