இந்திய மொபைல் மார்க்கெட்டில் அதிகப்படியான நிறுவனங்கள் அதிகம் மொபைல்களை கொண்டு வருவது பட்ஜெட் மொபைல் மற்றும் அதற்கு மேலுள்ள மொபைல்களை வாங்கும் பயனாளர்களை குறிவைத்துதான். ஸ்மார்ட் மொபைல் வாங்குவதற்கு யோசித்து ( இன்னும் அந்த விகிதாச்சாரம் உண்டு ) அதன் விலையை கண்டு வாங்காமல் இருக்கும் மக்களுக்கு ஏற்றவாறு அதிகப்படியான மொபைல்கள் வருவதில்லை. இந்த குறிப்பிட்ட சதவீத மக்களை குறிவைத்துதான் ஜியோ தனது மொபைல்களை கொண்டுவரவுள்ளது. ஆனால் நோக்கியா நிறுவனம் முந்தி கொண்டுள்ளது எனலாம். ஜியோ ரீடைலுடன் இணைந்து ” Nokia C10 plus ” என்ற மாடலை கொண்டு வந்துள்ளது.
இது முழுக்க முழுக்க புதிதாய் ஸ்மார்ட் போன் வாங்குபவர்களை குறிவைத்தே கொண்டு வரப்பட்ட மாடல். நோக்கியா இணையதளத்திலும் மற்ற இ காமர்ஸ் தளங்களிலும் இந்த மொபைலை ₹5,999 ரூபாய்க்கு வாங்கலாம். Jio Exclusive ஆபர் மூலம் வாங்கினால் 10% தள்ளுபடி உண்டு. இந்த மொபைல் ப்ளூ மற்றும் Purple ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கும்.
Nokia C01 Plus Specifications
Feature | Specifications |
Operating System | Android 11 operating system Go Edition |
Display | 5.45-inch HD display with a resolution of 720×1440 pixels |
RAM / Memory | 2 GB / 16 GB ( Can be extended using SD card up to 128 GB) |
Camera | 5 MP Rear Camera / 2MP front-facing camera with a flash |
Battery | 3000 mAh battery |