நம்மில் பலரும் நம்முடைய மொபைலில் சேரும் குப்பைகளை ( junk files ) நீக்க பல்வேறு செயலிகளை உபயோகிப்போம். சில மொபைல்களில் மொபைலுடனே இன்ஸ்டால் செய்து வருகிறது. இவற்றில் எதை நம்புவது என்பது கேள்விக்குறியே. சில சமயம் இந்த மாதிரி கிளீனிங் செயலிகளில் மால்வேர் / ஆட்வேர் வேறு சேர்ந்து உள்நுழைந்துவிடும். இதற்கு மாற்றாக கணிணி உலகில் அதிகம் பிரபலமான நார்ட்டன் நிறுவனத்தின் Norton Clean செயலியை உபயோகப்படுத்தலாம்.
இதன் பயன்கள்
- தேவையற்ற கோப்புகளை நீக்குகிறது
- உங்கள் செயளிகளை நிர்வகிக்க உதவுகிறது.
இந்த இரண்டாவது மிக முக்கியமானது. முக்கால்வாசி மொபைல்களில் மொபைல் வாங்கும்பொழுதே அதனுடன் சில பல blotware இணைந்துவரும். அவற்றை நாம் இனம் காணுவது கடினம். அதையும் இந்த செயலி மூலம் கண்டறிய முடியும். கீழே உள்ள படத்தில் நான்காவதாக இருப்பது அத்தகைய செயலி.
Norton Clean செயலி மிக எளிதாக யாரும் உபயோகிக்கும் வண்ணம் இருக்கிறது. செயலியை இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் மொபைலில் உள்ள கோப்புகளை பார்வையிட அனுமதி கேக்கும். அதன்பின் நேரடியாக ஸ்கேன் செய்யத் துவங்கி , உங்கள் மொபைலில் உள்ள தேவையற்ற கோப்புகளை செயலி வரிசையாக பட்டியலிடும். உங்களுக்கு ஏதாவது ஒன்றில் சந்தேகம் இருந்தால் அதை விட்டுவிட்டு மற்றவற்றை நீக்கலாம். அதன் பின் உங்கள் மொபைலில் எவ்வளவு இடம் காலியாக உள்ளது , எத்தனை முறை ஸ்கின் செய்திருக்கிறீர்கள் போன்ற விவரங்களையும் பார்த்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவசமான செயலி ஆகும்.
இந்த செயலியை இன்ஸ்டால் செய்ய
https://play.google.com/store/apps/details?id=com.symantec.cleansweep&hl=en_IN