ஒபேரா பிரவுசர் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கான தனது செயலியின் பெயரை “ஒபேரா டச் ” என்பதில் இருந்து “Opera” என மாற்றியுள்ளது. ஐஓஎஸ் இயங்குதளத்திற்காக மூன்று வருடங்களுக்கு முன்பு ஒபேரா டச் என்ற பெயரில் இந்த பிரவுசரை வெளியிட்டனர். ஐஓஎஸ் 14ல் “default Browser” மாற்றிக்கொள்ளும் வசதி வந்த பிறகு ஒபேரா பிரவுசர் அதிக அளவில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
Opera பிரவுசரின் பெயர் மட்டுமல்ல அதன் நிறமும் மாறியுள்ளது. ஊதா நிறத்தில் இருந்த லோகோ இப்பொழுது சிகப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. மேலும் பிரவுசரின் UI மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாய் பின்னணி அனிமேஷன் மாற்றப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதனால் ஏற்கனவே இருக்கும் ஒபேரா பிரவுசரின் சிறப்பியல்புகள் எதுவும் மாறாது , குறிப்பாய் ஸ்பீட் டயல், ஆக்ஷன் பட்டன் என அதுவும் மாறாது எனக் கூறியுள்ளது அந்நிறுவனம்.
அதே போல் கணிணி மற்றும் மொபைல் இரண்டிலும் நீங்கள் ஒபேரா பிரவுசரை சிங்க் செய்துகொள்ளமுடியும். ஒபேரா பிரவுசரை துவக்கி அதில் QR கோட் ஸ்கேன் செய்வதன் மூலம் இதை செய்யலாம்.