தமிழ் மசாலா படங்களில் வருவது போல இந்த tiktok – US arm only விவகாரத்தில் கடைசி நிமிட மாறுதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் இதை வாங்குவதற்கான பந்தயத்தில் முன்னிலையில் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்க அதிபர் விடுத்த கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் போட்டியில் இருந்து மைக்ரோசாப்ட் விலகியுள்ளது. Tiktok செயலியை உருவாக்கிய Bytedance மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு tiktok செயலியின் அமெரிக்க ஆபரேஷனை விற்க இயலாது என தெரிவித்துள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட்டின் அறிக்கை கீழே. இதை தொடர்ந்து Oracle நிறுவனம் tiktok செயலியை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Statement from Microsoft
ByteDance let us know today they would not be selling TikTok’s US operations to Microsoft. We are confident our proposal would have been good for TikTok’s users, while protecting national security interests. To do this, we would have made significant changes to ensure the service met the highest standards for security, privacy, online safety, and combatting disinformation, and we made these principles clear in our August statement. We look forward to seeing how the service evolves in these important areas.
அதே சமயத்தில் Wall stree Journal “Oracle will now become the app’s “trusted tech partner”. இதன் அர்த்தம் என்னவென்று சரியாக புரியவில்லை. இதன் நேரடி அர்த்தம் பார்த்தால் இது முழுமையான ஆப் விற்பனை அல்ல போல தெரிகிறது. இதற்கு ட்ரம்ப் என்ன சொல்கிறார் என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.