உலகின் பெரும்பான்மையான ஆன்ட்ராய்ட் மொபைல்களில் உபயோகப்படுத்தப்படும் Qualcomm chip ல் 400க்கும் மேற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . கூகிள், சாம்சங் ,எல் ஜி , Xiaomi போன்ற முதன்மையான மொபைல்களில் Qualcomm chip உபயோகப்படுத்தப்படுகிறது . கிட்டத்தட்ட 40% ஆன்ட்ராய்ட் மொபைல்களில் இந்த சிப் உள்ளது.
Digital Signal Processor (DSP) chips என்றழைக்கப்படும் இந்த சிப்பில் 400க்கும் மேற்பட்ட குறைப்பாடுகள் இருப்பதை CheckPoint security researchers நிறுவனத்தார் கண்டறிந்துள்ளனர். இதை உபயோகப்படுத்தி உங்கள் மொபைல்களில் என்ன செய்யலாம்
- உங்கள் டேட்டா முழுவதையும் உங்களுக்கு தெரியாமல் திருடிக்கொள்ளலாம். போட்டோஸ், வீடியோஸ், உங்கள் அழைப்புகள், உங்கள் லொகேஷன் போன்ற அனைத்தையும் திருடலாம்.
- உங்களுக்கு தெரியாமல் மால்வேரை உங்கள் மொபைலில் செலுத்தினால், நிரந்தரமாக உங்கள் மொபைலை செயலிழக்க செய்யலாம்.
- இந்த மால்வேர் செயலியை நீக்க முடியாமல் செய்யலாம்.
ஆனால் அந்த பாதுகாப்பு நிறுவனம், என்ன பிரச்சனை என்பதை பொதுவில் வெளியிடவில்லை. சம்பத்தப்பட்ட நிறுவனம் மற்றும் அரசு துறைகளுக்கு தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளது. இந்த பிரச்சனையில் Qualcomm chip இதுவரை ஆறு பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்துள்ளது. மீதம் உள்ளவற்றை சரி செய்ய அந்தந்த மொபைல் நிறுவனங்கள் செக்யூரிட்டி பேட்ச் வெளியிட வேண்டும்.
இது ஆன்ட்ராய்ட் மொபைல்களை மட்டுமே பாதிக்கும். ஏனென்றால் ஐ போன்களில் இந்த சிப் உபயோகப்படுத்தப்படுவதில்லை.