பேஸ்புக்கில் திருமதி.யமுனா ஹர்ஷவர்தனா ஆங்கிலத்தில் எழுதிய விமர்சனத்தை தமிழில் எழுதியது கார்த்திக்
மாதவன் இயக்கத்தில் இஸ்ரோ விஞ்ஞானி திரு. நம்பி நாராயணன் படம் வரப்போகிறது என்று தெரிந்தவுடன் கண்டிப்பாக அதை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதுவரை, போலியான குற்றசாட்டுகளாலும் பொய் வழக்காலும் அவரது வாழ்க்கை சின்னாபின்னமானது பின் சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார் என்பதைத் தவிர்த்து அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதே போல் படம் எப்படி இருக்கும் என்றும் தெரியாது.
படம் வெளியானபின் வந்த விமர்சனங்கள் அனைத்துமே படத்தைப் பற்றி மிக உயர்வாக எழுதி இருந்தன. பணம் பெற்றுக் கொண்டு விமர்சனம் எழுதும் ஒரே ஒருவர் மட்டும் வழக்கம் போல் இந்து மதத்திற்கு எதிராய் எழுதி இருந்த பொழுதே படம் நன்றாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் நான் பார்த்தது ஒரு அற்புத நிகழ்வின் வாழ்க்கை!!!
இஸ்ரோ விஞ்ஞானியாக, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவராக, ஸ்காட்லாந்தில் தூதராக, பிரான்சில் உள்ள இஸ்ரோவில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குழுவில் ஒருவராக, ரஷ்யாவில் பேச்சுவார்த்தையாளராக, இஸ்ரோவில் வீட்டில், எங்கும் நம்பி நாராயணனின் புத்திசாலித்தனம் மின்னுகிறது! நம்பமுடியாத புத்திசாலியாக இருந்ததால் எதிரிகளை பயமுறுத்திய ஒரு அசாதாரண மனிதனின் வாழ்க்கை இது.
படத்தின் துவக்கம் காமிராவின் அழகான கவித்துவமான நகர்த்தல்களுடனும் பின்னணியில் சுப்ரபாதத்துடனும் துவங்குகிறது.
ராக்கெட் சயின்ஸ் என்பது பள்ளி ஆசிரியரால் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றல்ல, ஆனால் சிக்கலான திரைக்கதை உள்ளடக்கத்தை அதன் மதிப்பைக் கொஞ்சம் கூட குறையாமல் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் வழங்குவதை மாதவன் உறுதி செய்துள்ளார் ! நம்பியின் பாத்திரத்தை அந்த மனிதனின் சொந்த வாழ்க்கைக்குள் நுழைவது போல் நடித்திருக்கிறார், இறுதிக் காட்சியில் நாயகன் அமரும்போது கூட, அந்த மாற்றம் தடையின்றி இருந்தது!
இப்படத்தின் தனிச்சிறப்பே உணர்ச்சிவசப்படுதல், மிகை நடிப்பு, காதை அடைக்கும் இசை, தேவையற்ற அதிகப்படியான மேக் அப் போன்ற எந்தவித காரணிகளும் இல்லாமல் எதை நமக்கு தர வேண்டுமோ அதைத் தந்திருப்பதே…காட்சிகளின் தீவிரம், நகைச்சுவை, நட்பு மற்றும் மதிப்பு , ஆபத்துகள் மற்றும் த்ரில்கள், அவசரம் மற்றும் கவலைகள் அனைத்தும் இயற்கையாய் அனைவரிடமும் வெளிப்பட்டிருக்கிறது செயற்கை பூச்சுகள் இல்லாமல்.
இஸ்ரோவில் பணிபுரிந்த ஒருவரின் தனி மகத்துவம், அந்த நேரத்தில் அவருடன் பணியாற்றியவர்கள் செய்த தியாகங்கள், அவர்கள் செய்ய வேண்டிய ஆபத்துகள், அவர்களின் குடும்பத்தின் அமைதியான துன்பங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் விதம். அவரும், அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க கிட்டத்தட்ட இரண்டரை தசாப்தங்களாகப் போராடிய மனிதனின் மனக்கசப்பு, இவை அனைத்தும் மிகவும் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன மற்றும் அடிப்படையான பொதுவான தன்மை என்னவென்றால், நம் தேசத்தின் மீதான ஆழ்ந்த அன்பிற்காக அவர்கள் அனைத்தையும் செய்தார்கள் (தொடர்ந்து செய்கிறார்கள்).
முழுக்கதையும் சொல்லப்பட்ட நேர்காணலின் முடிவில், நம்பி நாராயணன் ‘ஜெய் ஹிந்த்’ என்று உச்சரிக்கிறார். நாட்டின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதை அவருக்கு மிகவும் தகுதியான முறையில் வழங்குவது ஒருவரை தன்னிச்சையாகப் பாராட்டத் தூண்டுகிறது. அது ஒருவருக்கு பிரமிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. நம்பி “பெரிய காரியங்களை மட்டும் செய்து பழகியவர்”!
அதைப் பார்த்தவர்கள், அதை மதிப்பிடவும் மற்றும் நீங்கள் இயங்கும் சமூக வலைத்தளங்களில் பகிரவும்.
இன்னும் பார்க்காதவர்கள் கண்டிப்பாக பாருங்கள். நினைவில் கொள்ளுங்கள், இது ராக்கெட் அறிவியல் , எனவே பெரிய திரையில் பார்ப்பதே , சிறந்த அனுபவம் தரும். எனவே, தியேட்டருக்குச் செல்லுங்கள்.
நம்பி போல் பெரிய காரியங்களை செய்யவும் ! உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இதைப் பார்க்க வைக்கவும் . அதற்காக அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக நேசிப்பார்கள்.
பார்க்க வேண்டும்.