இரு மாதங்களுக்கு முன்பு ” Message Reactions ” என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஆனால் அறிமுகப்படுத்திய பொழுது ஒரு சில ரியாக்ஷன் எமோஜி மட்டுமே இருந்தது. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறோம். இதன் பின் பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு மட்டும் அனைத்து வகையான எமோஜி உபயோகப்படுத்தும் ஆப்ஷன் வந்தது. இந்நிலையில் இந்த ஆப்ஷன் அனைத்து வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்களுக்கும் இன்று முதல் கிடைக்கும் என அறிவிப்பு வந்துள்ளது. இதை எப்படி உபயோகப்படுத்துவது என பார்ப்போம்.
How to use more message reactions in Whatsapp
- எந்த மெசேஜுக்கு ரியாக்ஷன் தர வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த மெசேஜை தேர்வு செய்யவும்.
- இப்பொழுது வழக்கமான 6 ரியாக்ஷன் காட்டும். அதன் இறுதியில் + இருக்கும். அந்த + ஐகானை க்ளிக் செய்தால் , உங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கும் அனைத்து எமோஜிக்களும் கீழே காட்டும். அதில் எது வேண்டுமோ அதை தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த வசதி ஆண்ட்ராய்ட் , ஐஓஎஸ் மட்டுமில்லாது கணிணியில் உபயோகப்படுத்தும் வெப் பதிப்பு வரை அனைத்திலும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதி இப்பொழுது உங்களுக்கு காட்டவில்லையெனில் காத்திருக்கவும். இந்த வார இறுதிக்குள் அனைவருக்கும் இந்த வசதி வந்துவிடும்.