ரஷ்ய அரசுக்கும் ட்விட்டருக்கும் இடையேயான சண்டை முற்றியுள்ளது. தாங்கள் சொன்ன ட்வீட் மற்றும் போட்டோக்களை உடனடியாக நீக்காவிடில் twitter ஐ ஒரு மாதத்திற்குள் சஸ்பெண்ட் செய்யப்போவதாக ரஷ்ய அரசாங்கம் கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களில் ரஷ்ய அரசாங்கம் தடைசெய்யப்பட்ட விஷயங்களை பற்றிய டிவீட்களை பலமுறை நீக்க சொல்லியும் ட்விட்டர் நிறுவனம் கேட்கவில்லை. குறிப்பாய் போதை மருந்து, போர்னோகிராபி சம்பந்தப்பட்ட விஷயங்களை நீக்க சொல்லியும் அதை செய்யவில்லை. இதனால் ட்விட்டரில் அப்லோட் ஸ்பீடை ரஷ்ய அரசாங்கம் குறைத்தது.
இதற்கு ட்விட்டரின் பதில் எப்படி இருக்கும் என தெரியவில்லை. ஆனால் ரஷ்யாவை பாராட்ட வேண்டும். ஏனென்றால் இந்த போர்னோகிராபி விஷயங்களை நானே பலமுறை ரிப்போர்ட் செய்தும் ட்விட்டர் நீக்கவில்லை. அதுமட்டுமல்ல மற்றவர்களின் போட்டோவை எடுத்து அதை ட்வீட் செய்வது போன்ற வேலைகளும் நடக்கின்றன. இதற்காக பெரிதாய் சண்டை போட்டாலும் வேலையாவதில்லை. இந்திய அரசும் இது சம்பந்தமாய் twitter இன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் நெருங்கி வருகிறது,