வாட்ஸ் அப் செயலி போன்ற ஒரு செயலிதான் இந்த சந்தேஸ். இது இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட ஒன்று. இந்திய அரசு துறையான “NIC” இதை உருவாக்கியுள்ளது. முதலில் இந்திய அரசு ஊழியர்களுக்கு இடையேயான கருத்து பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டது என்றாலும் பொது மக்களும் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. இதுவரைக்கும் இது கூகிள் ப்ளே ஸ்டோரில் லிஸ்ட் செய்யப்படவில்லை. அதே சமயத்தில் ஆப்பிள் ஸ்டோரில் இது இருக்கிறது.
எப்படி டவுன்லோட் செய்வது ?
இதை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். இந்த தருணத்தில் உங்களுக்கு ஒரு வார்னிங் மெசேஜ் வரும். அதை தவிர்க்க கீழே உள்ளவற்றை செய்யவும்.
ஆண்ட்ராய்ட் போனில் டவுன்லோடு செய்ய https://www.gims.gov.in/dash/dlink
- From a Home screen, navigate to Settings.
- Tap Lock screen and security.
If unavailable, tap Security. - Tap the Unknown sources switch to turn on or off.
If unavailable, Unknown sources to turn on or off. Enabled when check mark is present. - To continue, review prompt then tap OK.
ஐபோனில் டவுன்லோடு செய்ய https://apps.apple.com/in/app/sandes/id1517976582
அதன் பிறகு வழக்கமான முறையில் இன்ஸ்டால் செய்யவும். செயலியை துவங்கியவுடன் ரிஜிஸ்டர் செய்யணும்.
- உங்கள் மொபைல் நம்பர் அல்லது ஈமெயில் இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்யலாம்.
- முதலில் ரிஜிஸ்டர் செய்ய உபயோகிக்கும் மொபைல் / ஈமெயில் ஐடியை பின்பு மாற்ற முடியாது. எனவே கவனமாக ரிஜிஸ்டர் செய்யயவும்.
- உங்கள் மொபைல் நம்பர் / ஈமெயில் ஐடிக்கு வரும் OTP எண்ணை உள்ளீடு செய்யவும்.
- வழக்கமாக செயலிகள் கேக்கும் பர்மிஷன்களை allow செய்யவும்.
- அடுத்து உங்கள் மொபைல் கான்டெக்ட் sync செய்யவும்.
இப்பொழுது சந்தேஸ் செயலியை நீங்கள் உபயோகப்படுத்தலாம். வாட்ஸ் அப் / சிக்னல் செயலி போன்றதுதான் இது.
- இது அரசாங்க செயலி .எனவே உங்கள் தகவல்கள் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பப்படாது
- இதில் அரசு ஊழியர்கள் இருந்தால் அவை அந்த துறையினரால் உறுதிப்படுத்தப்பட்ட எண்களாக இருக்கும்.
- இது End to End encrypted செயலி என சொல்லப்படுகிறது. அங்ஙனம் இருந்தால் நல்லது.