ஏப்ரல் மாத துவக்கத்தில் “Say Namaste ” பற்றிய பேச்சு அடிபட்டபொழுதே இதை பற்றி ஒரு பதிவு எழுதினேன். அப்பொழுது அது சோதனை முயற்சியாகத்தான் இருந்தது. மேலும் செயலி இல்லை. இணையதளம் மட்டுமே. இப்பொழுது செயலி மற்றும் இணையதளம் இரண்டின் மூலமும் வீடியோ கான்பரன்ஸ் செய்ய முடியும். இது இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதை எப்படி உபயோகப்படுத்தலாம் என இங்கு காண்போம். இணையதளம் மூலம் வீடியோ கான்பரன்ஸ் செய்வது பற்றி இங்கு எழுதியுள்ளேன்.
எப்படி உபயோகிப்பது ?
அவர்களின் இணையதளதில் நுழைந்தவுடன் இரண்டு ஆப்ஷன் இருக்கும். புதிதாய் ஒரு மீட்டிங் துவக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள மீட்டிங்கில் சேர்வது. புதிதாய் மீட்டிங் துவக்க ” Create New Meeting” க்ளிக் செய்ய வேண்டும். அதற்கடுத்து உங்கள் பெயரை கேக்கும். அதன் பின் மீட்டிங் பற்றிய விவரங்களை காட்டும். அதை நீங்கள் யாருடன் பகிர வேண்டுமோ அவர்களுக்கு பகிரலாம். மீட்டிங்கில் இணைய மீட்டிங் எண்ணும் அவர்கள் கொடுக்கும் கோடும் முக்கியமானது.
உங்கள் ஸ்க்ரீனில் வலதுபுறத்தில் யார் யார் மீட்டிங்கில் இணைந்துள்ளனர் என்ற விவரம் காட்டப்படும். இடது மேல் மூலையில் மீட்டிங் விவரங்களை பகிர வசதி உள்ளது. மீட்டிங் துவங்கியவுடன் ஸ்க்ரீனின் கீழ் பகுதியில் கேமரா / மைக்ரோ போன் ஆன் / ஆப் செய்யும் வசதி உள்ளது. அதே போல் உங்கள் ஸ்க்ரீனை மீட்டிங்கில் உள்ளவர்களுடன் பகிரவும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட கோப்புகளையும் பகிரலாம். அதே போல் மீட்டிங்கில் உள்ள யாரவது ஒருவருடன் தனிப்பட்ட சாட் செய்ய இடதுபுறம் கீழே உள்ள சாட் ஐகானை அழுத்தினால் விண்டோ ஓபன் ஆகும். அதில் யாருடன் பேச வேண்டுமோ அவர்களுடன் தனிப்பட்ட முறையிலும் பேசி கொள்ளலாம் இல்லை பொதுவாய் அனைவருடனும் சாட் செய்யலாம்.
ஒரே லட்சம் பேருக்கு மேல் இந்த செயலியை தங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ளனர். அதே போல் ப்ளே ஸ்டோரில் 4.3 ரேட்டிங் தந்துள்ளனர். இதையும் உபயோகப்படுத்தி பார்ப்போமே..
“Be Vocal about Local“