Self destructing messages: next whatsapp feature

Self destructing messages

சமீபத்தில் வாட்ஸ் அப் டார்க் மோட் ஆப்ஷனை கண்டு வந்தது. இது வாட்ஸ் அப் உபயோகிப்பாளரிடையே பரவலான வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்தபடியாக பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் வசதி தானாகவே அழியும் மெசஜ் (Self destructing messages). இதைத்தான் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதை இப்பொழுது வாட்ஸ் அப் டெஸ்டிங் செய்யத் துவங்கியுள்ளது.

இது வாட்ஸ் அப் பயனர்களின் பிரைவசி அதிகரிக்கும். ஆனால் ஒரு நாட்டின் பாதுகாப்பு என்ற கோணத்தில் பார்த்தால் இது மிகப் பெரிய அச்சுருத்தல். ஒரு மணி நேரத்தில் துவங்கி ஒரு வருடத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பும் மெசேஜ் தானாக அழியும் வகையில் செட் செய்ய இயலும். இதன் மூலம் தீவிரவாதிகளும், நக்ஸல்களும் எளிதாக செய்தி பரிமாற்றம் செய்து கொள்ள இயலும். எனவே இந்த வசதியை வாட்ஸ் அப் தரக்கூடாது என்பதே என் கருத்து.

Beta Testing

இப்பொழுது இந்த Self destructing messages பீட்டா பதிப்பில் வெளி வந்து பல உபயோகிப்பாளர்களால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பீட்டாவில் வரும் அத்தனை வசதிகளுமே ரெகுலர் அப்டேட்டிற்கு வரும் என சொல்ல இயலாது. இருந்தாலும் அரசாங்கம் இதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் ஏற்கனவே இருக்கும் என்க்ரிப்ஷன் வசதி காரணமாகவே அரசு உளவுத் துறைகள் பிரச்சனைக்குள்ளாகின்றன. இதனாலேயே அரசாங்கம் வாட்ஸ் அப் சர்வர்களை இந்தியாவில் நிறுவ வேண்டும் என சொல்லிக்கொண்டு வருகிறது.

என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.


Related : வாட்ஸப்(Whatsapp) க்ரூப் பாதுகாப்பானதா ?

About Author