Sleeping Tabs – Microsoft Edge

மைக்ரோசாப்ட்டின் “Edge ” பிரவுசர் இப்பொழுது புதிதாய் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிரவுசரில் அதிகமான “tab” களை உபயோகிக்கும் நபர்களுக்கு மிக வசதியாக இருக்கும். இங்கு எழுதுவது டெஸ்க்டாப் பிரவுசரை பற்றியே. இன்னும் மொபைல் செயலியில் இந்த வசதி வரவில்லை.

பிரவுசரில் அதிகமான “Tab”களை ஓபன் செய்துவைத்தால் பிரவுசரின் வேகத்தை மட்டுமல்ல கணிணியின் வேகத்தையும் குறைக்கும். ஏனேனில் நீங்கள் அந்த “Tab”ஐ பார்க்காவிட்டாலும் பின்னணியில் அது இயங்கி கொண்டிருப்பதே காரணம்.இப்பொழுது “Edge” ல் வந்துள்ள இந்த வசதி மூலம் இதை மாற்றலாம்.

முதலில் பிரவுசர் அப்டேட்டாக உள்ளதா என பார்க்கவும். அதற்கு

  1. settings சென்று “About Microsoft edge ” தேர்வு செய்யவும். உங்கள் பிரவுசர் அப்டேட்டாக இல்லையெனில் தானாக அப்டேட் ஆகும்.

2. இப்பொழுது “System” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

3. அதில் ” Save Resources” என்ற தலைப்பின் கீழ் எவ்வளவு நேரம் கழித்து ஒரு “Tabஐ “sleeping mode” க்கு மாற்ற வேண்டும் என தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல் எந்த ஒரு இணையத்தளத்திற்காவது இந்த வசதியை உபயோகப்படுத்தக்கூடாது எனில் அதையும் செய்து கொள்ளலாம்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.