கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 4

This entry is part 4 of 4 in the series கங்கை உருவாகிறாள்

பயணம் மிகவும் சிறப்பாகவே அமைந்தது.  இந்தப் பயணம் வழி பஞ்ச் ப்ரயாக் என்று அழைக்கப்படும் ஐந்து சங்கமங்களில் இரண்டு சங்கமங்களை நான் பார்த்ததோடு, உங்களுடனும் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  உங்களுக்கும் இந்தப் பயணமும், பதிவுகள் வழி சொன்ன தகவல்களும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.  ஒரு சிலருக்கேனும் இந்தத் தகவல்கள் பயன்படக்கூடும் என்றும் நம்புகிறேன்.  இந்த பயணம் குறித்த தகவல்களை, பாகீரதி தளம் வழி பகிர்ந்து கொண்ட நண்பர் கார்த்திக் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.