அத்தியாயம்-3 தக்ஷனின் யாகத்திலிருந்து வெளியேறிய ததீசி முனிவரை நாரதர் வழி மறித்தார். நேரே கயிலாயம் சென்று உமா மகேஸ்வரனை மனந்தினாலும், நாவினாலும், உடலினாலும் சிந்தித்து, துதித்து வணங்கி நடந்தவற்றை முறையிட்டார். “இல்லை நாரதா! தக்ஷன் “வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)”
Tag: சேலத்துப் புராணம்
வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி
நீண்ட சடைமுடியியில், இளஞ்சந்திரனையும் கங்கையினையும் அணிந்தவரும், மானையும் மழுவையும் கரங்களில் ஏந்தியவரும், நெற்றிக்கண்ணை உடையவரும், தேவர்களின் மணிமுடிகள் தனது பாதங்களில் பட்டுக் கொண்டிருப்பவரும் , கொன்றை மாலையை முடியில் அணிந்தவரும், அரவத்தை இடுப்பினில் அணிந்தவருமான சிவபெருமான் கயிலாயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்க தேவர்களும், ரிஷிகளும், சிவனடியார்களும் நான் முந்தி நீ முந்தி என்று அவரை தரிசிக்க நெரிசலை உண்டு பண்ண நந்திதேவர் அவர்களை நெறிப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.
சேலத்துப் புராணம் – கயிலாயச் சருக்கம்
பொன்முடிகளால் மின்னும் வெள்ளியங்கிரியாக விளங்கும் கயிலாய மலையின் மீது சிவபெருமான் வீற்றிருந்தார். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளை வந்து தொழுவதற்கு பிரம்ம தேவனும், மகா விஷ்ணுவும் காத்திருந்தனர். நாதன் அருளும் மலை, நான்மறை தோன்றிய மலை, பர்வத ராஜனின் மகளான பார்வதி தேவி எம்பெருமானுக்கு இட பாகத்தில் அமர்ந்து காட்சி தந்து கொண்டிருக்கும் மலை. இந்தக் கயிலை மலையின் அகலம் இருபது கோடி யோசனையாகும். நாற்பது கோடி யோசனை தூரம் நீளத்தை உடையது அந்த உயர்ந்த மலை. பல இலட்ச எண்ணிக்கையில் சிகரங்களைத் தன்னகத்தே கொண்ட மலை (ஒரு யோசனை என்பது நான்கு மைல்களிலிருந்து ஏழு மைல் கல் நீளம்- ஆசிரியர்)
சேலத்துப் புராணம் – 1
சேலத்திற்கும் விநாயகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஊரின் நடு நாயகமாக வீற்றிருக்கும் ஸ்ரீராஜகணபதியின் பாத கமலங்களை வணங்கி இந்தப் புராணத்தை எழுத ஆரம்பிக்கிறேன். இந்த தலத்தில்தான் ஔவையார் பல அற்புத நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார். கஞ்சமலை சித்தர் தகடூர் அரசன் அதியமான் நெடுமான் அஞ்சிக்கு கொடுத்த நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கிய இடம் சேலம். ஔவையார் மாதவி என்ற பெண்மணியின் இரண்டு பெண்களின் திருமணத்திற்கு சேர சோழ பாண்டியர்களை வரவழைத்த இடம் சேலம். காய்ந்து போன பனை மரத்தைப் பூத்துக் குலுங்க வைத்து பனம்பழம் பறித்த இடம் இந்தச் சேலம் நகரம். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் முந்திக் கொண்டு கயிலாயம் சென்று விட ஔவையார் விநாயகர் அகவல் பாடியதும் தனது துதிக்கையால் செந்தூக்காகத் தூக்கி கயிலாயத்தில் விநாயகப் பெருமான் வைத்த இடம் இந்தச் சேலம் நகராகும். அந்தப் புராணத்தை அந்த விநாயகரின் பாதங்களைத் தொழுது தொடங்குகிறேன்.