Tamil typing in Windows 10

நம்மில் பலரும் மொபைலில் தமிழ் டைப் செய்ய கூகிள் கீ போர்ட் உபயோகிப்போம். அதே போல் முன்பு கணிணியில் உபயோகிக்க கூகிள் இண்டிக் கீ போர்ட் இருந்தது. ஆனால் இப்பொழுது அது கிடைப்பதில்லை. அதே போல் நெறய பேர் செல்லினம் போன்றவற்றை உபயோகிக்கின்றனர். ஆனால் அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். விண்டோஸ் 10ல் எளிதில் தமிழ் கீ போர்ட் கிடைக்கிறது. அதை உபயோகிப்பதும் எளிதாக இருக்கிறது. கீழே அதற்குண்டான வழிகள் (Tamil typing)

  1. ஸ்டார்ட் மெனுவில் செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  2. பின் ” Time & Language” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  3. அதன்பின் “Language” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  4. இப்பொழுது ” Add Language” மூலம் தமிழை தேர்வு செய்து இன்ஸ்டால் செய்யவும். பின் லாக் அவுட் செய்து மீண்டும் லாகின் செய்யவும்.
  5. உங்கள் கணிணியின் வலது மூலையில் நேரம் காட்டும் இடத்திற்கு முன் எந்த கீ போர்ட் வேண்டும் என தேர்வு செய்துகொள்ளலாம் அல்லது விண்டோஸ் கீ + ஸ்பேஸ் பாரை அழுத்தினாலும் மாறும் .

கீழே Tamil typing எப்படி எனேபிள் செய்வது என்பதற்கான ஸ்க்ரீன்ஷாட்டுகள்

Tamil typing
Tamil typing
Tamil typing
Tamil typing

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.