விதவிதமான மால்வேர் / ஆட்வேர் வந்துகொண்டே இருக்கின்றன. இப்பொழுது புதிதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது TERRACOTTA Android Malware. இதை பரப்பும் பல ஆண்ட்ராய்ட் செயலிகள் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதை கண்டுபிடித்து கூகிள் நிறுவனத்திற்கு ரிப்போர்ட் செய்தது whiteops satori mobile security team.
இந்த TERRACOTTA Android Malware மூலமாய் மொபைல் உபயோகிப்பவர்களுக்கு நேரடியாய் பிரச்சனை அதிகம் இல்லை. அதாவது , இதன் மூலம் பணம் சுருட்டல் அல்லது உங்கள் தகவல்களை திருடுவது போன்றவை நடைபெறாது. இது எப்படி வேலை செய்கிறது என பார்ப்போம் .
இலவச பொருட்கள் ( ஷூ, டிக்கெட்ஸ் , கூப்பன்ஸ் மற்றும் இன்னும் இது போன்றவை) தருவதாய் சொல்லி சில செயலிகள் உங்களை இன்ஸ்டால் செய்ய வைக்கும். இலவசம் என்றவுடன் நாமும் இன்ஸ்டால் செய்வோம். இன்ஸ்டால் செய்து இரண்டு வாரங்களில் பின்னணியில் செயல்பட துவங்கும். க்ரோம் பிரவுசரின் வெப் வியுவில் விளம்பரங்களை காட்டத் துவங்கும். விளம்பரங்கள் வர வர அவர்களுக்கு வருமானம் கிட்டும்.
பின்னணியில் இந்த செயலிகள் விளம்பரங்களை ஓட்டிக் கொண்டே இருப்பதால் உங்கள் மொபைல் பேட்டரி விரைவில் காலியாகும் / பழுதாகும். அதே போல் மொபைல் டேட்டாவும் காலியாகும். இதுதான் இந்த செயலிகளின் மூலம் வரும் ஆபத்து.
இந்த செயலிகள் இப்பொழுது நீக்கப்பட்டுவிட்டன என்றாலும் புதிதாய் எந்த செயலியை இன்ஸ்டால் செய்வதாக இருந்தாலும் அதை பற்றி கூகிள் தேடுபொறியில் தேடி படித்துவிட்டு இன்ஸ்டால் செய்தல் நலம்.