The Freelancer

The Freelancer

The Freelancer ” வெப் சீரியஸ் ” A Ticket To Syria” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒன்று. நமக்கெல்லாம் தெரிந்த கதைதான். வழக்கமான லவ் ஜிஹாத் கதை. இதில் பாதிக்கப்படுவது முஸ்லீம் பெண்ணே. அது ஒன்றுதான் மாறுதல்.

இனாயத் கான் & அவினாஷ் இருவரும் மும்பை காவல் துறையை சேர்ந்தவர்கள். அரசியல்வாதியை பகைத்துக்கொண்டதால் பழி வாங்கப்படுகின்றனர். இதன் பிறகான சண்டையில் தவறுதலாக அவினாஷின் மனைவின் அவர்கள் குழந்தை மீது காரை ஏற்றி விட, அவினாஷ் மனைவி மனநலம் பாதிக்கப்படுகிறார். இதன்பின் வெளிநாடு சென்று பயிற்சி எடுத்து தனக்கென ஒரு குழு அமைத்துக்கொண்டு சர்வதேச கூலிப்படை போல் இயங்குகிறார்.

இனாயத்தின் மகள் அலியா . மலேசியா முஸ்லிமான மோஷின்னை காதலித்து குடும்பத்தினரின் சம்மதத்துடன் மணக்கிறார். திருமணத்திற்கு பின் துபாய் செல்ல வேண்டியவர்கள் குடும்பத்துடன் துருக்கி செல்ல அதன் பின் தன் குடும்பத்தினருடன் தொடர்பை இழக்கிறார் அலியா. துருக்கியில் இருந்து சிரியா சென்றவர்கள் ஐ எஸ் ஐஸ் எஸ் உடன் இணைய , திரும்பவும் நாடு திரும்ப துடிக்கிறார் அலியா.

அரசாங்கத்தின் பல கதவுகளை தட்டியும் திறக்கப்படாதால், இனாயத் அமெரிக்க தூதரக வாசலில் தற்கொலை தாக்குதல் போல் நாடகம் நடத்தி இறந்து போகிறார். இந்த செய்தியை கேட்டவுடன் இந்தியா திரும்பும் அவினாஷ் , அலியாவை மீட்க முயல்கிறார்.

அவினாஷ் காமத்தாக மோஹித் ராணா. கனகச்சிதமாக அந்த வேடத்தில் பொருந்துகிறார். அலியாவை மீட்க துடிக்கும் பொழுதும் சரி, மனைவிக்காக பரிதவிக்கும் நேரங்களிலும் கச்சிதமாக நடித்துள்ளார். அவருக்கு உதவும் நபராக அனுபம் கெர்.

அதிகமாய் பில்ட் அப் செய்து கடைசியில் அவரை சிரியாவில் இருந்து மீட்கும் காட்சியை சொதப்பி இருக்கிறார்கள் அதாவது மிக எளிதாய் அந்த கிராமத்தில் சென்று அழைத்து வருவதாய் காட்டியுள்ளனர். அமெரிக்க எப் பி ஐயின் இரட்டை முகத்தை ஆங்காங்கே வெளிப்படுத்தி உள்ளனர். அதற்கு ஒரு பாராட்டு.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்த வெப் சீரியஸ் உள்ளது. தமிழ் மொழியிலும் பார்க்கலாம்

About Author