Label

Label – Web Series

நடிகர் ஜெய் நடிப்பில் வந்துள்ள வெப் சீரியஸ் ” Label ” . வட சென்னையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தொடர் இது. வழக்கமாய் வட சென்னை என்றவுடன் நாயகன் அங்கிருக்கும் பல கும்பல்களில் ஒருவனாய் இருப்பான். அவ்வாறு இல்லாமல் கொஞ்சம் மாற்றி எடுத்துள்ளனர். நாயகனின் இளம் வயதில் நடக்கும் ஒரு சம்பவம் எப்படி பின்னால் அவனை பாதிக்கிறது என்பது கதையின் ஊடாய் வந்துள்ளது.

Label – கதை

வட சென்னை வாலி நகரை சேர்ந்தஇளம் வக்கீலாக ஜெய் . நீதிபதியாக வேண்டும் என்பதே அவரது குறிக்கோள். அவரது பகுதியை சார்ந்தவர்கள் மேல் போடப்படும் பொய் வழக்குகளை உடைப்பதே பிரதான வேலையாக கொண்டுள்ளார். வட சென்னை ( gang ). அய்யா லேபிள் மற்றும் செங்குட்டுவன் லேபிள்.

அந்த பகுதி இளைஞர்கள் லேபிளில் மாட்டிவிட கூடாது என்பதற்காக உழைக்கும் ஜெய் . அதையும் மீறி அய்யா லேபிளில் சிக்கும் இரு இளைஞர்கள் . அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள். எப்படி அந்த பிரச்சனைகளை மீறி உண்மையான யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவர்கள் திருந்துகிறார்கள் என்பது ஒரு இழை.

நீதிபதிக்கான தேர்வு எழுத செல்லும் பொழுது ஜெய் சிறுவனாக இருந்த பொழுது நடந்த சம்பவம் தடையாக இருக்கிறது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் பலரும் இறந்து அல்லது கொல்லப்பட்டுவிட மீதம் இருக்கும் ஒருவர் வந்து வாக்குமூலம் அளித்தால் மட்டுமே அவர் நீதிபதியாக இயலும் என்ற நிலையில் சம்பந்தப்பட்ட நபர் வந்து சாட்சி சொல்வாரா ?

அய்யா என அழைக்கப்படும் நபர் யார் ? திரை மறைவில் இருந்துகொண்டு ரவுடிகளை இயக்கும் நபர் யார் ? இந்த கேள்விக்கு கொஞ்சம் கவனித்து பார்த்தால் நடுவிலேயே விடை கிடைக்கிறது. ஆனாலும் இருந்து எபிசோட் வரை இதை ரகசியாமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர்.

குறைகள்

ஒவ்வொரு எபிஸோடிலும் ரத்தம் தெறிக்கிறது. அதே போல் கெட்ட வார்த்தைகள். யதார்த்தத்தை காட்டுகிறேன் என குடும்பத்துடன் உக்கார்ந்து ரசிக்க விடாமல் செய்கிறார்கள். அதே போல் , தமிழ் இயக்குனர்களுக்கு எப்படி பட்ட கதையாக இருந்தாலும் அதில் காதலை நுழைக்க வேண்டும். இதிலும் உண்டு.. அந்த காட்சிகள் தவிர்த்து வேறெதிலும் ஒட்டாமல் நாயகி வந்து போகிறார்.

ஜெய்யின் அப்பாவாக சரண் ராஜ். அவரும் ஒரு காலத்தில் இதே போன்று குழுக்களில் இயங்கியவர். அவர் சம்பந்தப்பட்ட கதை ஒன்று வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் எதுவும் காட்டவில்லை. ஜெய் ஏன் இறுக்கமான முகத்தோடு சுற்றுகிறார் என புரியவில்லை. வித்யாசமான கேரக்டர் கிடைத்தும் பெரிதும் சோபிக்கவில்லை அவர் என்பது இந்த வெப் சீரியஸின் ஆக சிறந்த சோகமாகும்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் காணலாம்

About Author