நாம் ஏற்கனவே எழுதியபடி மைக்ரோசாப்ட் நிறுவனம் Tiktok செயலியை வாங்க பேச்சுவார்தை நடத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ட்விட்டரும் இருப்பதாக செய்திகள் வருகின்றன.
செப்டம்பர் 15க்கு பிறகு Tiktok நிறுவனம் அமெரிக்காவில் எந்த பரிவர்த்தனைகளை செய்ய இயலாது என ட்ரம்ப் தடைவிதித்த பிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது. ஆனாலும் ட்விட்டரால் இந்நிறுவனத்தை வாங்க இயலுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த கேப்பிட்டல் $30 பில்லியன். இதனால் அவர்கள் புதிதாய் இந்நிறுவனத்தை வாங்க வேண்டுமென்றால் முதலீடு தேவைப்படும். அதை வெளியில் இருந்து திரட்ட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு ஏற்கனவே இருக்கும் ட்விட்டர் பங்குதாரர்கள் ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே . அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுக்க இருக்கும் விலையை இவர்களால் முந்த இயலுமா என்பது சந்தேகமே . இப்பொழுது இரு நிறுவனங்களும் போட்டியில் இருந்தாலும் மைக்ரோசாப்ட் நிறுவனமே முன்னிலையில் உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தால் அந்த அளவுக்கு நிதி திரட்ட இயலாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை பற்றி ட்விட்டருக்கு, tiktok நிறுவனமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.