Toshiba Smart TV- Made in India TV

ஜப்பானிய நிறுவனமான டொஷிபா , மீண்டும் இந்திய ஸ்மார்ட் டீவி மார்க்கெட்டில் களம் இறங்குகிறது. செப்டம்பர் 18ல் புதிதாய் பல Smart TV களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை இந்தியாவில் Hisense நிறுவனத்தால் மார்க்கெட்டிங் செய்யப்படும். இந்த புதிய ஸ்மார்ட் டிவிக்கள் இந்தியாவில் ( Made in India) தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.

Specification

மற்ற ஸ்மார்ட் டிவிகள் போலில்லாமல் இவை ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்குபவை அல்ல. Hisense நிறுவனத்தின் Vidaa இயங்குதளத்தில் வேலை செய்பவை. Smart TV களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளான நெட் ப்ளிக்ஸ் , அமேசான் ப்ரைம் மற்றும் யூ ட்யூப் போன்றவை இந்த இயங்குதளத்திலும் எந்தவித பிரச்சனை இல்லாமல் வேலை செய்யும் என கூறப்படுகிறது. Dolby Vision HDR and Dolby Atmos sound இதில் உள்ளது.

அமேசான், ப்ளிப் கார்ட் , ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் டாட்டா க்ளிக் தளங்களில் செப்டம்பர் 18 முதல் வாங்க இயலும். முதல் நான்கு நாட்கள் அதாவது செப்டம்பர் 21 வரை வாங்குபவர்களுக்கு டிவி பேனலுக்கு 4 வருட வாரன்டி கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

Ultimate 4K TV series of LED TV தான் முதலில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் விலை விவரம் தெரியாவிடினும் 43 inches, 50 inches, 55 inches, and 65 inches என்ற நான்கு வடிவில் வரும் இந்த சீரியஸ் விலை Rs 30000 க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் இருந்தாலும் ஆன்ட்ராய்ட் இல்லை என்பதால் இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என தெரியவில்லை.

https://tamiltechportal.in/2020/08/28/compaq-smart-tv-availale-from-sep-1-in-flipkart/

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.