Twitter App for Android உபயோகிப்பவரா ?

நீங்கள் Twitter App for Android உபயோகிப்பவரா ? அப்ப இந்த செய்தியை தவறவிடாமல் படிக்கவும். சமீபத்தில்தான் ஒரு ட்விட்டர் ஸ்கேம் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே . இந்நிலையில் இப்பொழுது ட்விட்டரின் ஆன்ட்ராய்ட் செயலியில் ஒரு பாதுகாப்பு குறைப்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் ஓரியோ மற்றும் பை (Pie) பதிப்புகளில் உள்ள சிறு பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இது நடைபெறலாம் என ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

என்ன செய்ய வேண்டும் ?

இந்த பிரச்சனை காரணமாக நீங்கள் உங்களுக்குத் தெரியாமல் எதாவது மால்வேர் செயலி எதாவது உங்கள் போனில் இன்ஸ்டால் செய்தால், அதன் மூலம், உங்கள் ட்விட்டர் செயலியில் நுழைந்து நீங்கள் ட்விட்டரில் அனுப்பும் direct message ஐ அவர்கள் படிக்க இயலும். இதை தவிர்க்க உடனடியாக உங்கள் Twitter App for Android க்கு அப்டேட் வந்துள்ளதா என பாருங்கள். அப்டேட் இருந்தால் உடனடியாக அப்டேட் செய்யவும். இந்த பிரச்சனை இந்த இரண்டு ஆன்ட்ராய்ட் பதிப்புகளுக்கு மட்டுமே. மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம்.

பொதுவாகவே இது என்றில்லை, எந்த ஒரு செயலிக்கும் அப்டேட் காட்டினால் உடனடியாக செய்வது நல்லது. சிலர் அதை செய்வதே இல்லை. எனவே அப்டேட் காட்டினால் அப்டேட் செய்ய மறக்க வேண்டாம்.

About Author