மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டமின் அடுத்த மிக முக்கிய அப்டேட்டாக விண்டோஸ் கணிணியில் ஆன்ட்ராய்ட் செயலிகளை நிறுவும் வசதியை கொடுக்கலாம் என்ற செய்தி இப்பொழுது வந்துள்ளது. இந்து குறித்து விண்டோஸ் சென்ட்ரல் இணையத் தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
இப்பொழுதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் ஆன்ட்ராய்ட் செயலிகளை நேரடியாக உபயோகிக்க இயலாது. இதற்கான தனியான மென்பொருளை நிறுவி அதன் மூலமே உபயோகிக்க முடியும். இப்பொழுது “Project Latte ” என்ற ப்ராஜெக்டின் கீழ், ஆன்ட்ராய்ட் செயலிகளை விண்டோஸ் ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்துகொள்ளும் வசதியை கொண்டுவரவுள்ளது. இதற்காக செயலியை உருவாக்குபவர்கள் வேறு எந்த வசதியையும் செய்யாமல் ஆன்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் கொண்டு வரலாம். இந்த வசதி வந்தபின் நேரடியாக விண்டோஸ் ஸ்டோரில் இருந்து ஆன்ட்ராய்ட் செயலிகளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஆனால் சில செயலிகள் கூகிள் ப்ளே சர்வீஸஸை சார்ந்து உள்ளன. அவற்றை எப்படி உபயோகிக்க முடியும் என தெரியவில்லை.
இந்த அப்டேட் வரும்பொழுது இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்கலாம்.