வாட்ஸ் அப் செயலியில் பலரும் நீண்ட காலமாய் எதிர்பார்த்த / கேட்ட வசதி தானே அழியும் மெஸேஜ். இது ஏற்கனவே சிக்னல் செயலியில் இருக்கும் வசதி. அதாவது நீங்கள் அனுப்பும் மெசேஜ் / படம் / வீடியோவை குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தானே டெலிட் ஆவது போல் செட் செய்ய முடியும். இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என வாட்ஸ் அப் கூறியுள்ளது. இது பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு ஏற்கனவே வந்திருக்கலாம். இந்த வசதி ஆன்ட்ராய்ட் / ஐ ஓ எஸ் / வெப் வாட்ஸ் அப் என மூன்றிலுமே விரைவில் அப்டேட் ஆகும்
இது குறித்து அவர்களின் பதிவில் கூறியுள்ளது.
- தனிப்பட்ட அரட்டையில் அனுப்புபவரோ இல்லை பெறுபவரோ இந்த வசதியை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் வாட்ஸ் அப் குழுவில் குழுவின் அட்மின்கள் இந்த வசதியை ஆன் செய்ய வேண்டும். இல்லையேல் உபயோகிக்க முடியாது.
- நீங்கள் disappearing messages வேறு ஒருவருக்கு பார்வேர்ட் செய்யப்பட்டால் பார்வேர்ட் ஆன மெசேஜ் டெலிட் ஆகாது
- நீங்கள் போட்டோ / வீடியோ disappearing messages அனுப்பியிருந்து அதை பெறுநர் அதை வைத்திருந்தால் அது அவர்களின் போனில் இருக்கும். செயலியில் மட்டுமே டெலிட் ஆகும்.
Common questions | Answers |
---|---|
Name of the feature? | Disappearing Messages |
Status? | Under development |
Availability? | Soon |
I’ve installed the latest version but I haven’t this feature, why? | This feature will be officially available in a future update |