கூ செயலி அறிமுகமான புதிதிலேயே அதை பற்றி எழுதி இருந்தேன் . அப்பொழுது இந்த செயலியை பற்றி பலரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று பலரும் ட்விட்டரிலிருந்து அங்கே மாறிக் கொண்டுள்ளனர். இதை பயன்படுத்துவது மிக எளிது. சில அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.
புதிதாய் பதிவு செய்வது ?
இதில் ரிஜிஸ்டர் செய்வது மிக எளிது. உங்கள் மொபைல் நம்பர் மட்டுமே போதும். உங்கள் நம்பரை பதிவு செய்தவுடன் உங்கள் மொபைலுக்கு “OTP ” வரும். அதை பதிந்தால் செயலிக்குள் நுழையலாம். செயலியில் முதல் ஸ்க்ரீனே உங்களுக்கான மொழியை தேர்வு செய்வதுதான்.
அடுத்தது நேராக உங்கள் ப்ரோபைலுக்கு செல்லும் செயலி. இதில் “Edit Profile” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். பெயர் மற்றும் செயலியில் உங்கள் ஹேண்டில் (ஐடி) போன்றவற்றை தேர்வு செய்யவேண்டும். இதை செய்யாவிட்டால் உங்கள் ஹேண்டில் “Guest” என்று இருக்கும். எனவே முதலில் ஹேண்டில் உருவாக்குவது அவசியம்.
இந்த கூ செயலியின் மற்றொரு சிறப்பம்சம் நீங்கள் நேரடியாக குரல் பதிவை பதிவு செய்யலாம். இதற்காக தனியாக வேறொரு தளத்தில் ரெக்கார்ட் செய்து இங்கே லிங்க் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.