ஏற்கனவே வாட்ஸ் அப் செயலி மற்றும் சிக்னல் செயலிகளில் “Expiring Messages ” வசதி உள்ளது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மெசெஞ்சரில் “Vanish Mode ” என்ற இந்த புதிய வசதியை கொண்டுவந்துள்ளது. இது இன்னும் சில நாட்களில் பேஸ்புக் மெஸெஞ்சருக்கும் வரும் என்று சொல்லப்படுகிறது.
Enable Vanish Mode
இது மற்ற வசதிகளை போல எப்பொழுதும் “on” செய்து வைத்திருக்க இயலாது. தேவைப்படும் பொழுது வசதியை “on ” செய்துகொள்ளவேண்டும்.
- நீங்கள் இருக்கும் சாட் விண்டோவில் மேலே சுவைப் ( Swipe ) செய்தால் இந்த வசதி “on ” ஆகும். நார்மலான விண்டோ கலர் மாறி கருப்பு காலை விண்டோ வரும்.
- என்ன மெசேஜ் அனுப்ப நினைக்கிறீர்களோ அந்த மெசேஜை டைப் செய்யுங்கள்.
- நீங்கள் இன்ஸ்டாகிராம் மெஸெஞ்சரை விட்டு வெளியே வந்துவிட்டால் இந்த மெசேஜ் அழிந்து விடும். அதை மனதில் வைத்துக்கொள்ளவும்
- அதே போல் நீங்கள் யாருக்கு இந்த மெசேஜ் அனுப்புகிறீர்களோ அவர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்தால் ஒன்னும் பண்ணுவதற்கில்லை. இதையும் மனதில் வைத்து கொள்ளவும்.
- கீழே உள்ள படங்களில் முதலில் இருப்பது vanish mode on பண்ணுவதற்கு முன்பு
- கடைசி படம் மெசேஜ் அனுப்பிவிட்டு சாட் விண்டோ மூடி விட்டு மறுபடியும் திறந்தால் வருவது.
Tamiltech வாட்ஸ் அப் குழுவில் இணைந்து அப்டேட்களை உடனுக்குடன் பெற