What is Dark Web

நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்ததெல்லாம் நாம் வழக்கமாய் செல்லும் இணையதளங்கள் மற்றும் செயலிகள் மட்டுமே. அதைத் தவிர்த்து ஆபாசத்தளங்கள் உண்டு அதே போல் கணிணி விளையாட்டு தளங்கள் என பல உண்டு. ஆனால் நம்மில் பலருக்கும் தெரியாத “Dark Web” என அழைக்கப்படும் பல தளங்கள் உள்ளன. அவை கூகிள் போன்ற தேடு பொறிகளால் வரிசைப்படுத்தப்படாதவை. சாதாரண ப்ரவுஸர்களான க்ரோம் , இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்றவைகளின் மூலம் இந்த இணையத் தளங்களை பார்க்க இயலாது.

எதற்கு இந்த டார்க் வெப் ?

ஹேக் செய்யப்பட நெட்பிலிக்ஸ் அக்கவுண்ட்கள், திருடப்பட்ட க்ரெடிட் கார்ட் விவரங்கள் , திருடப்பட்ட பேங்க் அக்கவுண்ட் விவரங்கள், தனி மனித விவரங்கள் இந்த dark web தளங்களில் எளிதாக மிக சல்லிசாக கிடைக்கும். அதே போல் , போதை பொருட்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களும் இங்கே கிடைக்கும்.

யாருடைய இணையத்தளத்தையாவது ஹேக் செய்ய வேண்டுமா அல்லது குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்யவேண்டுமா அதற்கும் இங்கே ஆட்கள் கிடைப்பார். பொதுவாய் சொல்வதாய் இருந்தால் அனைத்து விதமான க்ரைம்களுக்கும் ஆள் கிடைக்கும்.

ஏற்கனவே சொன்னது போல் சாதாரணமாய் நாம் உபயோகிக்கும் பிரவுசர்கள் இதற்கு உதவாது. இதற்கு டார் என்ற பிரவுசர் தேவை. அதே சமயத்தில் இங்கு இருக்கும் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானது அல்ல. இந்த டார் பிரவுசரில் உபயோகிக்க தனியாக பேஸ்புக் உண்டு.facebookcorewwwi.onion என்ற இணைய தள முகவரி மூலம் அங்கு பேஸ்புக் உபயோகிக்க இயலும். பொதுவாய் டார் பிரவுசரில் மட்டும் உபயோகிக்க கூடிய தளங்கள் .onion என்ற எக்ஸ்டென்ஷனுடன் இயங்குகின்றன. எனவே டார் பிரவுசர் உபயோகிப்பது சட்ட விரோதம் அல்ல.

மேலும் சில நாடுகளில் சில குறிப்பிட்ட இணையதளங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் விபின் மூலம் டார் பிரவுசரை கனெக்ட் செய்து இங்கு இல்ல அதன் இணையதளத்தை (.onion) உபயோகப்படுத்தலாம். அதாவது இப்ப இங்க பேஸ்புக் தடை செய்யப்பட்டால் இந்த வழியை உபயோகப்படுத்தலாம்.

பி.கு. டார்க் வெப் முறைப்படுத்தப்பட்ட இணைய வெளி அல்ல. எனவே மால்வேர் (malware) அட்டாக் வாய்ப்புள்ளது. உங்களுக்கு அங்கு வேலை இல்லை வெறும் ஆசை மட்டுமே உள்ளது எனில் அந்தப்பக்கம் போகாமல் இருப்பது நல்லது.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.