Whatsapp Beta Update 2.20.201.10

இன்று வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.20.201.10 வந்துள்ளது. இது Whatsapp Beta பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே. புதிதாய் இப்பொழுது யாரும் வாட்ஸ் அப் பீட்டாவில் பதிவு செய்ய இயலாது. இந்த பதிப்பில் இரண்டு விஷயங்கள் வந்துள்ளன.

Mute Option

ஒன்று ஒரு குறிப்பிட்ட சாட்டை (Chat) காலவரையில்லாமல் “mute ” செய்து வைக்கலாம். இப்பொழுது அதிகபட்சமாக ஒரு வருடம் மட்டுமே “mute ” செய்ய இயலும். கீழே டார்க் மோடில் இருப்பது புதிதாய் வந்திருக்கும் வசதி.

New storage UI

வாட்ஸ்அப் உபயோகிப்பவர்கள் அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் . இந்த புதிய வசதி மூலம் எவ்வளவு இடத்தை வாட்ஸ் அப் மூலம் வந்த மீடியா பைல்கள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதில் பெரிய பைல்கள் எது எது ? எந்த மாதிரியான பைல்கள் வந்துள்ளன என அனைத்தும் பார்க்கலாம். உங்களுக்கு தேவையான வகையில் வரிசைப்படுத்தி பார்க்கலாம். இதற்காக தனியாக க்ளீன் அப் செயலி தேவையில்லை. வாட்ஸ் அப் செயலியில் இருந்தே இதை பண்ணலாம். இது Whatsapp Beta பாதிப்பு 2.20.201.9 ல் வந்தாலும் பலருக்கும் அப்டேட் ஆகவில்லை.

இந்த வசதிகள் அனைத்தும் பீட்டா சோதனையில் உள்ளன. எனவே விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.