Wrath of man

” Wrath of man “ இது Jason Statham நடித்து 2021ல் வந்த ஆங்கில திரைப்படம். 2004ல் வெளி வந்த பிரெஞ்சு படமான ” cash Truck ” படத்தை தழுவி எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஒரு வரியில் படத்தின் கதையை சொல்வதென்றால் , தன் மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் தந்தையின் கதை. இதுதான் ஒரு வரி கதை.

படம் துவங்கும் முதல் காட்சிதான் படத்தின் அடிப்படை. பணம் எடுத்து செல்லும் போர்டிகோ செக்யூரிட்டி நிறுவனத்தின் வாகனம் கொள்ளையடிக்கப்படுவதில் துவங்குகிறது படம். இந்த கொள்ளையின் பொழுது இரண்டு செக்யுரிட்டிகளும் இதில் சம்பந்தமே இல்லாத ஒரு சிறுவனும் கொல்லப்படுகின்றனர். ஆனால் இது துவக்கத்தில் காட்டப்படாது. இரண்டு பாதுகாவலர்கள் இறப்பது மட்டுமே காட்டப்படும். மீண்டும் மீண்டும் பிளாஷ் பேக்காக இந்த காட்சி காட்டப்பபடும்பொழுதுதான் நமக்கு அந்த சம்பவத்தின் வீரியும் புரியும். அந்த சிறுவனின் தந்தைதான் Jason Statham. நடந்த கொள்ளையில் இவரும் காயமடைவார். மகனின் இறப்பிற்கு இவரே காரணம் என சொல்லி மனைவி பிரிந்து சென்றுவிடுவாள். அதன் பிறகு தான் பழி வாங்குவதை துவங்குவார்.

இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் ஒரு தாதா . சம்பவம் நடக்கும் அன்று எந்த ட்ரக் கொள்ளையடிக்கப்பட்டதோ அந்த ட்ரக் எந்த வழியில் செல்கிறது என இவர்தான் சொல்லுவார். உண்மையில் இந்த இடம் குழப்பும். இவரது குழுவிற்கும் கொள்ளைக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும் இவரது குழுவில் உள்ள ஒருவர்தான் இந்த தகவல் கொடுத்து உதவ சொல்லுவார். அந்த உதவி செய்ய சென்றுதான் மகனை இழப்பார்.

இதன் பிறகு எப்படி தன் அடையாளங்களை மாற்றிக் கொண்டு அந்த கொள்ளை கும்பலையும் மகனை கொன்றவனையும் பழி வாங்குகிறார் என்பதே கதை . அவருக்கு எப் பி ஐ யில் உள்ளவரும் உதவுகிறார். கடைசியில் அந்த நிறுவனத்தின் உள்ளே இருப்பவர்தான் கொள்ளைக்கு உதவுகிறார் என்பதையும் கண்டுபிடிக்கிறார். Jason Statham அதிகமாய் பேசாமல் வலம் வருகிறார். அந்த கொள்ளை கும்பல் முன்னாள் ராணுவத்தினர். அதிலிருந்து ஒய்வு பெற்றப் பின் வருமானமில்லாததால் கொள்ளையில் ஈடுபடுவார்கள். ஒருமுறை பார்க்கலாம்

படம் lions gate play என்ற ஓ டி டி யில் இருக்கிறது

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.