பொதுவாய் நாம் அனைவருமே “Incognito Mode / Private Browsing Mode” உபயோகிக்கும் பொழுது நாம் பிரவுஸ் செய்யும் எதுவும் எங்கும் சேமிக்கப்படுவதில்லை என்றே நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது உண்மையா என்றால் இல்லை என்றே கூகிளும் கூறியுள்ளது. இப்பொழுது அமெரிக்காவில் கூகுளுக்கு எதிராய் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மாதிரி பிரைவேட் மோடில் உபயோகிக்கும்பொழுது தங்கள் விவரங்களை கூகிள் ட்ரேக் செய்ததாக கூறி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பதில் மனு அளித்த கூகிள் “நாங்கள் எங்குமே அவ்வாறு கூறவில்லை என்றும், பிரவுசர் உபயோகிப்பாளரின் விவரங்களை சேமிக்காது. ஆனால் நீங்கள் செல்லும் தளம் , நீங்கள் அலுவலகத்திலோ அல்லது பள்ளியிலோ இணையத்தை உபயோகம் செய்திருந்தால் அவர்களும், உங்கள் இன்டர்நெட் ப்ரொவைடரும் நீங்கள் Incognito Mode மூலம் எந்த தளங்களுக்கு சென்றீர்கள் என்ற விவரம் அறியமுடியும் என்று கூறியுள்ளது. மேலும், தங்களது பிரவுசரில் பிரைவேட் மோட் ஓபன் செய்யும்பொழுதே இது அறிவிப்பு வரும் என சொன்னாலும் நீதிபதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே , Incognito Mode மூலம் பிரவுஸ் செய்தால் யாருக்கும் தெரியாது என நீங்கள் நினைத்தால் அதை மறந்துவிடுங்கள். நீங்கள் எப்படி க்ரோம் உபயோகித்தாலும் அந்த விவரம் மேலே குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் இருப்பவர்களுக்கு தெரியவந்துவிடும்.