ஒரே ஒரு செயலியை இந்தியா தடை செய்தது. அதை தொடர்ந்து அதை போல் எத்தனை செயலிகள் ?? இந்திய செயலிகள் போதாதென்று ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கோலோச்சி வரும் பேஸ்புக் , இன்ஸ்டாக்ராம் போன்றவையும் இந்த ஷார்ட் வீடியோ செயலிகளை நோக்கி படமெடுத்துவருகின்றன. இப்பொழுது புதிதாய் “Youtube Shorts” இன்னும் சில நாட்களில் இந்திய உபயோகிப்பாளர்களுக்கு மட்டும் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இங்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற நாடுகளில் பின்னர் அறிமுகப்படுத்தப்படும். இன்று ப்ளாக் போஸ்ட் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
15 நொடிகள் ஓடக்கூடிய சிறிய வீடியோக்களை இதன் மூலம் உருவாக்கலாம். டிக் டாக் செயலியில் இருந்த வசதிகள் அனைத்தும் இதிலும் கிடைக்கும் என தெரிகிறது. வீடியோக்களுடன் யூடியூப் லைப்ரரியில் இருந்து ஆடியோக்களையும் சேர்த்து கொள்ளலாம். அதே போல் கவுண்ட்டவுன் டைமர் செட் செய்தும் வீடியோக்கள் எடுக்கலாம்.ஆனால் 15 வினாடி என்பது மிகக் குறுகிய நேரம் என்றே தோன்றுகிறது. இந்த வசதி வந்தவுடன் ஒரு ஷார்ட் வீடியோ Youtube Shorts மூலம் போடுவோம் நாமும்.