Zoho mail – perfect Solution for small companies

Zoho mail – Introduction

நாம் உபயோகப்படுத்தும் பெர்சனல் மெயில் அநேகமாய் ஜி மெயிலாக இருக்கக்கூடும். அதே சமயத்தில் சிறு நிறுவனங்களில் இருந்து மத்திய தர நிறுவனங்கள் வரை அவர்களின் கம்பெனி மெயில் ( உதாரணம் sales@cswebservices.in) சர்வீஸிற்கு கூகிள் நிறுவனத்தின் கட்டண மெயில் சேவையை பெறுகின்றன. ஆனால் அவை இனி Zoho mail பயன்படுத்தி பார்க்கலாம். மிக எளிதாக இருக்கும் அதே நேரம் கூகிள் நிறுவனத்தின் கட்டணத்தை விட இவர்களது கட்டணம் குறைவு.

நிறுவனங்களுக்கும் இலவச வசதி
Zoho mail
Zoho mail

ஜி மெயிலில் உங்கள் நிறுவனத்தின் பெயரில் மெயில் ஐடி வேண்டுமென்றால் ஒரே ஒரு ஐடி உருவாக்குவதாக இருந்தாலும் இலவசம் கிடையாது. கண்டிப்பாக ட்ரையல் காலம் முடிந்தவுடன் காசு கட்டியாக வேண்டும். ஆனால் Zoho mail நீங்கள் ஐந்து ஐடி மட்டும் உருவாக்கினால் அதை இலவசமாக தருகின்றனர். ஒவ்வொரு ஐடிக்கும் 5 ஜிபி வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் உங்களுக்கு அதிகபட்ச தேவைகள் இருப்பின் நீங்கள் அதற்கு மேம்பட்ட திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். ஆரம்ப திட்டம் ஒரு மெயில் ஐடிக்கு 59ல் இருந்து துவங்கி அதிகபட்ச திட்டத்தில் 399 ருபாய் வரை இருக்கிறது. உங்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை பொறுத்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். எனக்கு வெறும் 5 ஜிபி ஸ்பேஸ் போதும் ஆனால் பயனாளர்கள் அதிகம் என்போர் ஆரம்பகட்ட திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

எந்த திட்டமாக இருந்தாலும் , வெப் பிரவுசர் , மொபைல் செயலி மற்றும் மெயில் கிளையண்ட் ( outlook etc ) என மூன்று விதமாக உங்கள் மெயில் பாக்ஸை நீங்கள் ஹேண்டில் செய்யலாம். என்னுடைய வெப் டிசைன் நிறுவனத்தின் மெயில் ஐடிகளை நான் Zoho நிறுவனம் தரும் மெயில் வசதிக்கு மாற்றியாகி விட்டது. இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர்களின் வெப் இன்டர்பேஸ் மற்றும் மொபைல் செயலி இரண்டையும் உபயோகப்படுத்துகிறேன். எந்தவித பிரச்னையும் இல்லை. அதே போல் முன்பு என்னுடைய வெப் ஹோஸ்ட் தந்த மெயில் ஐடியில் இருந்த அனைத்து மெயில்களையும் அப்படியே பேக் அப் எடுத்து இங்கு மாற்றுவதற்கும் அவர்கள் டூல் வைத்துள்ளனர். ஒரு மெயில் கூட மிஸ் ஆகாமல் மாற்றி விட்டேன்.

ஜி மெயிலில் இருப்பது போல் ஒரே நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களுடன் சாட் வசதி உள்ளது. நீங்கள் Zoho CRM வாங்கும் பட்சத்தில் அதனுடன் எளிதாக இன்டக்ரேட் செய்ய இயலும். எல்லாவற்றிற்கும் மேல் இது ஒரு இந்திய நிறுவனம் அதுவும் தமிழ்நாட்டு நிறுவனம். ஜி மெயில் தரும் வசதிகளுக்கும் மேம்பட்டே உள்ளது இவர்களது வசதி. சிறுநிறுவனங்கள் தங்களது மெயில் ஐடிகளை இதற்கு மாற்றுவது குறித்து யோசிக்கலாம்.

இந்த இணைய தளத்தில் நல்லதொரு ஒப்பீடு செய்துள்ளனர். நேரமிருப்பின் பார்க்கவும்.

About Author