Zoom App – பாதுகாப்பானதா ?

இந்த லாக் டவுன் காலத்தில் உலக அளவில் பலராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் ஒரு செயலி Zoom App. ஆனால் அது பாதுகாப்பானதா என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நியூஸ் 18 இணைய தளத்தில் இதை பற்றிய ஒரு செய்தி வந்திருந்தது. அப்பொழுதே இதன் பாதுகாப்பத்தன்மையை பற்றி சந்தேகித்தேன். இன்று dailymail தளத்தில் வந்துள்ளது செய்தி எனது சந்தேகத்தை உறுதி செயகிறது.

End to End Encryption of Zoom App

Zoom App இணையதளத்தில் அவர்கள் கொடுத்துள்ள பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களில் இந்த செயலி ஆனது End to End Encrypt செய்யப்பட்டுள்ளது என்பதே. ஆனால் உண்மையில் அப்படி செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லை இன்றே இந்த செய்தி அறிக்கை சொல்கிறது. அதாவது இவர்கள் செய்துள்ள பாதுகாப்பானது நமது மொபைல் அல்லது கணிணியில் இருந்து அவர்களின் சர்வர் வரை மட்டுமே, நமது வங்கி மற்றும் ஆன்லைன் பர்ச்சேஸ் தளங்களை போல. End to End Encrypt என்பது வாட்ஸ் அப் செய்யும் என்க்ரிப்ஷன் போன்றது. சம்பந்தப்பட்ட இருவரோ அல்லது பலரோ மட்டுமே அந்த வீடியோவை பார்க்க இயலும். ஆனால் இதை இந்த செயலியில் கடைபிடிக்கவில்லை என்று அடித்து சொல்கின்றனர் இணைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்கள்.

பல Zoom App வீடியோக்கள் ஆன்லைனில் கிடைக்கின்றது

இன்று dailymail பதிப்பித்துள்ள செய்தியில் பலரின் ஆன்லைன் தெரபி, கவுன்சிலிங், தனிப்பட்ட வீடியோக்கள் என பலவும் இணையத்தில் கிடைப்பதாக சொல்கிறார்கள். இது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடியாகும். இதற்கு இதுவரை அந்நிறுவனத்திடம் இருந்து பதில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2019ல் வெறும் 10 மில்லியன் பேர் உபயோகித்த இந்த செயலி இப்பொழுது 200 மில்லியன் நபர்களால் உபயோகிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இப்பொழுது பரவலாக உபயோகிக்கப்படுகிறது. நம் நண்பர்கள் இதை உபயோகிப்பதாய் இருந்தால் கொஞ்சம் யோசித்து செய்யவும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.