ஜீவன் கிரன்

ஜீவன் கிரன் – டெர்ம் இன்ஸ்யூரன்ஸ்

LIC யின் புதிய டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் ஜீவன் கிரன்

எல் ஐ சி நிறுவனம் புதியதொரு டெர்ம் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் பெயர் ஜீவன் கிரன். இது இன்று (ஜுலை 27, 2023) முதல் வழங்கப் படுகிறது 

இத்துடன் சேர்த்து எல் ஐ சி நான்கு டெர்ம் பாலிசித் திட்டங்களை வழங்குகிறது 

ஜீவன் அமர் : வழக்கமான டெர்ம் பாலிசி – முகவர்கள் மூலம் வழங்கப்படுகிறது 

டெக் டெர்ம் : எல் ஐ சியின் இணையதளம் வழியாக மட்டுமே பெறக்கூடிய டெர்ம் பாலிசி 

ஜீவன் சரல் பீமா : 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை மட்டுமே வழங்கப்படும் டெர்ம் பாலிசி

ஜீவன் கிரன்

புதியாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டெர்ம் பாலிசியில் 2 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன 

1. ப்ரீமியம் தொகை திரும்பக்கிடைக்கும் வசதி : இத்திட்டத்தின் பயனர்கள் பாலிசி காலத்தில் இறந்தால் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். பாலிசி காலம் முழுதும் பயனர் உயிருடன் இருந்தால், திட்ட முதிர்வன்று கட்டிய ப்ரீமியம் முழுதும் திருப்பித் தரப்படும். ஜி எஸ் டி மற்றும் ரைடர்களுக்கான ப்ரீமியம் திரும்ப வராது. 

2. பாலிசி காலத்தில் பயனர் இறந்தால் காப்பீட்டுத் தொகை நாமினிக்கு மொத்தமாக கிடைக்குமாறு செய்யலாம் அல்லது ஐந்தாண்டுகளுக்கு மாதாமாதம் / காலாண்டுக்கு ஒரு முறை / 6 மாதங்களுக்கு ஒரு முறை / ஆண்டுக்கொருமுறை பிரித்து கிடைக்குமாறு செய்யலாம். மொத்தமாக பணம் கிடைத்தால் குடும்பத்தாரால் அதைக் கையாள முடியாது என்று நினைப்போரும் , மொத்தமாக பணம் கிடைக்கும் போது உறவினர், நண்பர்கள், ஃபேஸ்புக் தொடர்புகளின் தொந்தரவு தாங்காது என்று நினைப்போரும் இதைத் தெரிவு செய்யலாம். 

18 முதல் 65 வயது வரை உள்ளோர் ஜீவன் கிரனில் டெர்ம் பாலிசி பெறலாம் 

15 லட்ச ரூபாய் குறைந்தபட்ச அளவு காப்பீடு. உச்ச வரம்பு ஏதுமில்லை (விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் உடல் நலனைப் பொருத்து காப்பீடு பெறலாம்) 

காப்பீட்டு காலம் : 10 முதல் 40 ஆண்டுகள் வரை 

வழக்கம் போல எல் ஐ சி யின் ப்ரீமியம் பிற காப்பீட்டு நிறுவனங்களின் ப்ரீமியத்தை விட அதிகமாகத்தான் இருக்கும். ஜீவன் கிரனில் புகைப்பழக்கம் இல்லாத 40 வயது காரர் 20 ஆண்டு டெர்ம் பாலிசி ஒரு கோடிக்கு எடுத்தால் ப்ரீமியம் ஆண்டுக்கு 88,470 ரூபாய் வரும். 

காப்பீட்டின் உண்மையான தாத்பர்யம் புரிந்தவர்கள் ஜீவன் அமரில் டெர்ம் பாலிசி எடுக்கலாம். என்னதான் இருந்தாலும் கட்டுன பணமாவது திரும்ப வந்தாத்தான் திருப்தியா இருக்கும் என்போர் ஜீவன் கிரனில் டெர்ம் பாலிசி எடுக்கலாம் 

இதே அளவு காப்பீடு A நிறுவனத்தில் ஐம்பதாயிரத்துக்குக் கிடைக்கிறது, B நிறுவனத்தில் நாப்பதாயிரத்துக்கு கிடைக்கிறது என்போர் பிடித்தால் எல் ஐ சியில் எடுக்கலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு நிறுவனத்தில் எடுக்கலாம்.

About Author