நவம்பர் 27 கார்த்திகை 08 ராசி பலன்
🔵சனிக்கிழமை❄️
🕉️மேஷம்
நவம்பர் 27, 2021
குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளால் தீர்வு கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வின் மூலம் காலதாமதம் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். மனதில் இனம் புரியாத சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். ஓய்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
அஸ்வினி : ஆலோசனைகள் கிடைக்கும்.
பரணி : காலதாமதம் உண்டாகும்.
கிருத்திகை : அனுபவங்கள் ஏற்படும்.
🕉️ரிஷபம்
நவம்பர் 27, 2021
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதளவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று மனம் மகிழ்வீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : மாற்றம் பிறக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
🕉️மிதுனம்
நவம்பர் 27, 2021
உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
🕉️கடகம்
நவம்பர் 27, 2021
பூர்வீகச் சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிவட்டார நண்பர்களின் நட்பு அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உற்சாகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
பூசம் : நட்பு வட்டம் விரிவடையும்.
ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.
🕉️சிம்மம்
நவம்பர் 27, 2021
உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஆசை ஏற்படும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகம் : லாபம் உண்டாகும்.
பூரம் : புரிதல்கள் ஏற்படும்.
உத்திரம் : ஆசை பிறக்கும்.
🕉️கன்னி
நவம்பர் 27, 2021
குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
🕉️துலாம்
நவம்பர் 27, 2021
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மேம்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பொன், பொருள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
🕉️விருச்சிகம்
நவம்பர் 27, 2021
சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். கணவன், மனைவிக்கிடையே எண்ண ஒற்றுமை மேம்படும். சுபவிரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : தடைகள் விலகும்.
அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.
கேட்டை : ஒற்றுமை அதிகரிக்கும்.
🕉️தனுசு
நவம்பர் 27, 2021
தொழில் ரீதியான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மேம்படும். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : குழப்பங்கள் நீங்கும்.
உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
🕉️மகரம்
நவம்பர் 27, 2021
இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். விவசாய பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பந்தயம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. நபர்களின் தன்மைகளை அறிந்து உதவுவது மேன்மையை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். புரிதல் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : கவனத்துடன் செயல்படவும்.
🕉️கும்பம்
நவம்பர் 27, 2021
வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். சேவை நிமிர்த்தமான செயல்பாடுகளில் அனுகூலம் ஏற்படும். கற்பிக்கும் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். சுதந்திரம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : கட்டுப்பாடுகள் குறையும்.
🕉️மீனம்
நவம்பர் 27, 2021
பூர்வீகச் சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அனுகூலமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
பூரட்டாதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.