ஏப்ரல் 23 ராசிபலன்

🕉️மேஷம்
ஏப்ரல் 23, 2021

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் தோன்றும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : தெளிவு உண்டாகும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.


🕉️ரிஷபம்
ஏப்ரல் 23, 2021

செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணிய கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். இறைப்பணிக்காக நன்கொடைகளை கொடுத்து மனம் மகிழ்வீர்கள். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : அறிவு வெளிப்படும்.
ரோகிணி : மனம் மகிழ்வீர்கள்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
ஏப்ரல் 23, 2021

பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சியால் சேமிப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : புதுமையான நாள்.
புனர்பூசம் : சேமிப்புகள் உயரும்.


🕉️கடகம்
ஏப்ரல் 23, 2021

குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் மீதான நம்பிக்கை
அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : நன்மை உண்டாகும்.
பூசம் : லாபகரமான நாள்.
ஆயில்யம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


🕉️சிம்மம்
ஏப்ரல் 23, 2021

தீர்த்த யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மனை விவகாரங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரம் : சிக்கல்கள் குறையும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️கன்னி
ஏப்ரல் 23, 2021

பொதுக்காரியங்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். தந்தையுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் மேம்படும். ஆடை, ஆபரணங்களை வாங்குவதற்கான சூழல் உண்டாகும். சொந்த பந்தங்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.
சித்திரை : ஒற்றுமை மேலோங்கும்.


🕉️துலாம்
ஏப்ரல் 23, 2021

புதிய நபர்களின் ஆதரவால் தனவரவுகள் உண்டாகும். தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : தனவரவுகள் உண்டாகும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : நிதானம் வேண்டும்.


🕉️விருச்சிகம்
ஏப்ரல் 23, 2021

சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் உண்டாகும். வேள்விகளில் கலந்துக்கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : புகழப்படுவீர்கள்.
அனுஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : அபிவிருத்தியான நாள்.


🕉️தனுசு
ஏப்ரல் 23, 2021

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமையினால் மேன்மையான சூழல் உண்டாகும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர்களின் உதவியால் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : மேன்மையான நாள்.
பூராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


🕉️மகரம்
ஏப்ரல் 23, 2021

மனதில் இனம்புரியாத பயம் மற்றும் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். பிள்ளைகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். உறவினர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். செயல்பாடுகளின் தன்மை அறிந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கவலைகள் ஏற்படும்.
திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.


🕉️கும்பம்
ஏப்ரல் 23, 2021

சர்வதேச வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : லாபகரமான நாள்.
சதயம் : எண்ணிய பலன்கள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.


🕉️மீனம்
ஏப்ரல் 23, 2021

இளைய சகோதரர்களினால் ஆதாயம் உண்டாகும். மனை விருத்தி தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடக்கவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : அமைதி வேண்டும்.
ரேவதி : வெற்றி அடைவீர்கள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.