ஏப்ரல் 6 2022 தின ராசி பலன்கள்

ஏப்ரல் 4 2022 தின ராசி பலன்கள்

🕉️மேஷம்
ஏப்ரல் 04, 2022

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் வழியில் புதிய பயணங்கள் சாதகமாக அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். இனம்புரியாத பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அஸ்வினி : விவாதங்களை தவிர்க்கவும்.
பரணி : அனுபவம் உண்டாகும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


🕉️ரிஷபம்
ஏப்ரல் 04, 2022

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் விரயங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : நிதானத்துடன் செயல்படவும்.


🕉️மிதுனம்
ஏப்ரல் 04, 2022

மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலக பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : விருப்பம் நிறைவேறும்.
புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.


🕉️கடகம்
ஏப்ரல் 04, 2022

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : தாமதங்கள் குறையும்.
பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.
ஆயில்யம் : சேமிப்பு மேம்படும்.


🕉️சிம்மம்
ஏப்ரல் 04, 2022

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியாக பணிகளில் துரிதம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரம் : புரிதல் மேம்படும்.
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.


🕉️கன்னி
ஏப்ரல் 04, 2022

தனவரவு தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தத்தன்மையும், அலைச்சலும் உண்டாகும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். சக ஊழியர்களிடம் மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்வது நல்லது. அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : நெருக்கடிகள் நீங்கும்.
அஸ்தம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.


🕉️துலாம்
ஏப்ரல் 04, 2022

சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
சுவாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.


🕉️விருச்சிகம்
ஏப்ரல் 04, 2022

வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : விழிப்புணர்வு வேண்டும்.
கேட்டை : உதவி கிடைக்கும்.


🕉️தனுசு
ஏப்ரல் 04, 2022

தனவரவை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை மேம்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மூலம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
பூராடம் : ஒற்றுமை மேம்படும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️மகரம்
ஏப்ரல் 04, 2022

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், இலக்குகளும் பிறக்கும். லாபகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம் : இலக்குகள் பிறக்கும்.


🕉️கும்பம்
ஏப்ரல் 04, 2022

எந்தவொரு பணியையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். விவசாய பணிகளில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். மேன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஆதரவு மேம்படும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.


🕉️மீனம்
ஏப்ரல் 04, 2022

தனவரவு தேவைக்கு ஏற்ப அமையும். செயல்பாடுகளில் வேகமும், தைரியமும் மேம்படும். பழைய நண்பர்களின் அறிமுகமும், வருகையும் புதிய நம்பிக்கையை உருவாக்கும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : தைரியம் மேம்படும்.
உத்திரட்டாதி : லாபம் உண்டாகும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.