Undo delete messages

New Camera interface in Whatsapp ( Beta )

வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது இரண்டு புதிய விஷயங்களை இந்த WhatsApp beta for Android 2.22.8.11 பதிப்பில் வெளியிட்டுள்ளது. தற்சமயம் இந்த இரு வசதிகளும் வாட்ஸ் அப் பீட்டா செயலி உபயோகம் செய்பவர்களுக்கு மட்டுமே தற்பொழுது கிடைக்கும். அதிலும் அனைவருக்கும் இந்த வசதி வரவில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சில நாளில் மாற்ற பீட்டா செயலி உபயோகிப்பாளர்களுக்கு வரலாம். அவர்கள் சோதித்து அதில் உள்ள இறுதிக்கட்ட குறைபாடுகள் நீக்கப்பட்ட பின் பொதுவில் பயன்பாட்டிற்கு வரும். இந்த இரண்டு புதிய வசதிகளும் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள ” New Camera interface in Whatsapp ” ல் அடங்கும். அந்த இரண்டு விஷயங்கள் என்ன என்று பார்ப்போம்.

Feature NameNew Interface for Camera
Version WhatsApp beta for Android 2.22.8.11

New Camera interface in Whatsapp

உங்கள் சாட் விண்டோவில் நீங்கள் இரண்டு விதமாய் போட்டோ / வீடியோ அனுப்ப இயலும்.

  1. அட்டாச்மெண்ட் ஆப்ஷன் உபயோகித்து
  2. கேமிரா ஐகானை டச் செய்து அங்கிருந்து நேரடியாக படம் எடுத்தோ இல்லை அங்கிருந்து கேலரி சென்றோ அனுப்ப இயலும்.

இந்த இரண்டாவது ஆப்ஷனில்தான் புதிய வசதிகளை கொண்டுவந்துள்ளது வாட்ஸ் அப். தற்பொழுது இருக்கும் ஸ்க்ரீன் கீழே

இப்பொழுது புதிதாய் வந்திருக்கும் இரண்டு விஷயங்கள்

  1. கேமிரா ஐகான் டச் செய்தவுடன் வரும் ஸ்க்ரீனில் இடது பக்கம் கேலரி செல்ல புதிய ஐகான்
  2. கேலரி சென்றவுடன் இரண்டு புதிய டேப் ( Tab ) Recent / Gallery

இது நீங்கள் அனுப்ப வேண்டிய போட்டோவை எளிதில் கண்டெடுக்க வசதியாக இருக்கும். இந்த வசதி ஏற்கனவே ஐஓஎஸ் பீட்டா பதிவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author