தசரதர் மாமா காலைல பல் தேச்சுட்டு ப்ஃரிட்ஜ் மேல ஒரு கவரை வெச்சுட்டு “அப்பனே ராமசந்திரா” னு சொன்னவாரே ஹால் ஈசிசேர்ல சாய்ந்தார். அவர் கவர் வெச்சதை கௌசல்யா மாமி பாத்தது அவருக்கு தெரியாது.
கொஞ்சநேரத்துக்கு பின் மாமி திடீரென காலை விந்தி விந்தி நடந்தவாரு மாமாக்கு காபி கொண்டுவந்தா.
மாமா குடித்த டம்ளரை வாங்கியவாறு என்னத்த ப்ஃரிட்ஜ் மேல வெச்சிருக்கேள்னு தெரியாத மாதிரி கேட்டாள்.
மாமா -அதான் என் அக்கா பொண்ணு கல்யாணப்பத்திரிகை. நாம போவேண்டாமா. ரெண்டு பேருக்கும் டிக்கெட் புக் பண்ணிடவா.
மாமி- எனக்கு காத்தாலேந்து கால் சுளிக்கிண்டுருக்கு. நான் வரல. நீங்க போங்கோ. நம்ம பையன் ராமு அங்கதானே இருக்கான். ரெண்டுபேரும் அட்டெண்ட் பண்ணுங்கோ.
கால் சுளுக்கல் நாடகம்னு மாமாக்கு தெரியும். சொல்லமுடியுமா. ராமு ட்ரெய்னிங்கில் டெல்லி போயிருக்கான். சரி எனக்கு டிக்கெட் புக் பண்ணிக்கரேன்.
மாமி- ஹ்ம்ம். எவ்ளோ ஓதிடப்போரேள்.
மாமா- ஐந்தாயிரம்..
மாமி- என்னத்துக்கு அவ்ளோ பணம். ரெண்டாயிரம் போறும். இந்தாங்கோ 2001/- கவரில் போட்டு என் முன்னாலயே ஒட்டி கொடுங்கோ. பீரோல வெக்கரேன்.
மாமா- (மனசுக்குள்) ஏடீயம் இவ நம்பருக்கு ரிஜிஸ்டர் பண்ணினது தப்பா போச்சு. வீட்டுல இருக்கர பணத்திலேர்ந்தும் எடுக்க முடியாது. என்ன சோதனை.
தசரதன் மாமா ஸ்டேஷனுக்கு வந்து ரயிலுக்காக வெயிட்டிங். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.
தொடரும்