செப்டம்பர் 16 ஆவணி 31 ராசி பலன்
🕉️மேஷம்
செப்டம்பர் 16, 2021
நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தொழில் சார்ந்த கல்வி பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பரணி : பாராட்டுகள் கிடைக்கும்.
கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
🕉️ரிஷபம்
செப்டம்பர் 16, 2021
வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : காரியங்கள் நிறைவேறும்.
🕉️மிதுனம்
செப்டம்பர் 16, 2021
மனதில் பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். இழுபறியான பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் வெளிப்படையான பேச்சுக்களின் மூலம் மனவருத்தங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : சோர்வான நாள்.
திருவாதிரை : மனவருத்தங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : காலதாமதம் ஏற்படும்.
🕉️கடகம்
செப்டம்பர் 16, 2021
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் ஏஜென்சி தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
🕉️சிம்மம்
செப்டம்பர் 16, 2021
எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுத்து செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி எந்தவொரு வேலையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை பற்றிய சிந்தனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மகம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
🕉️கன்னி
செப்டம்பர் 16, 2021
பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : லாபம் ஏற்படும்.
அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
🕉️துலாம்
செப்டம்பர் 16, 2021
குழந்தைகளுக்கு சுபகாரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : பழுதுகளை சீர் செய்வீர்கள்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
🕉️விருச்சிகம்
செப்டம்பர் 16, 2021
விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சொத்து பிரிவினை தொடர்பான செயல்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : இழுபறிகள் அகலும்.
அனுஷம் : அனுபவம் மேம்படும்.
கேட்டை : சாதகமான நாள்.
🕉️தனுசு
செப்டம்பர் 16, 2021
கனிவான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் மதிப்புகள் அதிகரிக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : நம்பிக்கை மேம்படும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
🕉️மகரம்
செப்டம்பர் 16, 2021
உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : ஆதரவான நாள்.
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
🕉️கும்பம்
செப்டம்பர் 16, 2021
குடும்பத்தினருடன் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
சதயம் : விருப்பங்கள் நிறைவேறும்.
பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.
🕉️மீனம்
செப்டம்பர் 16, 2021
குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தனவரவுகளின் மூலம் கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில திருப்பங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.