செப்டம்பர் 17 புரட்டாசி 1 ராசி பலன்

செப்டம்பர் 17 புரட்டாசி 1 ராசி பலன்

🕉️மேஷம்
செப்டம்பர் 17, 2021

உறவினர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் செய்வீர்கள். கால்நடைகள் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.
பரணி : மேன்மை ஏற்படும்.
கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.

https://dailypanchangam.in/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be/
புரட்டாசி மாத ராசி பலன் படிக்க படத்தை க்ளிக் செய்யவும்

🕉️ரிஷபம்
செப்டம்பர் 17, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை தொடர்பான முயற்சிகள் மேம்படும். எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவதற்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.
ரோகிணி : முயற்சிகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️மிதுனம்
செப்டம்பர் 17, 2021

கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆபரணங்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். வாக்குறுதிகளை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எண்ணிய சில செயல்கள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். தன நெருக்கடிகளினால் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️கடகம்
செப்டம்பர் 17, 2021

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.


🕉️சிம்மம்
செப்டம்பர் 17, 2021

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : இழுபறிகள் குறையும்.


🕉️கன்னி
செப்டம்பர் 17, 2021

குழந்தைகளின் வழியில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவின் மூலம் ஆதாயமடைவீர்கள். வியாபார பணிகளில் பொருள் வரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆதாயமான நாள்.
சித்திரை : பொருள் வரவுகள் மேம்படும்.


🕉️துலாம்
செப்டம்பர் 17, 2021

தொழில் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
சுவாதி : கலகலப்பான நாள்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
செப்டம்பர் 17, 2021

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய முயற்சிகளுக்கேற்ப சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

விசாகம் : மனப்பக்குவம் ஏற்படும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.


🕉️தனுசு
செப்டம்பர் 17, 2021

தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : இழுபறிகள் குறையும்.
பூராடம் : நம்பிக்கை மேம்படும்.
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.


🕉️மகரம்
செப்டம்பர் 17, 2021

வர்த்தக பணிகளில் நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுக்கவும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகம் தொடர்பான விஷயங்களை பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஆலோசனைகள் வேண்டும்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : புரிதல் மேம்படும்.


🕉️கும்பம்
செப்டம்பர் 17, 2021

நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.


🕉️மீனம்
செப்டம்பர் 17, 2021

உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுணுக்கமான செயல்பாடுகளின் மீது ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.
ரேவதி : ஈடுபாடு உண்டாகும்.

About Author