டிசம்பர் 15 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்

வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனோதைரியம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் உயர் அதிகாரிகளின் மூலம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : மனோதைரியம் ஏற்படும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்

மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்

வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு சக உறுப்பினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️கடகம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்
நெருக்கமான நபர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆன்மிக எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும். கெளரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : மதிப்புகள் உயரும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்

முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : முன்கோபத்தை தவிர்க்கவும்.
பூரம் : ஆர்வம் காட்டுவீர்கள்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.


🕉️கன்னி
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்

கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : இன்னல்கள் குறையும்.
சித்திரை : திருப்திகரமான நாள்.


🕉️துலாம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்

நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். சுபச்செய்திகளின் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடைமைகளை கவனமாக பாதுகாத்து கொள்வது நல்லது. தொழிலில் இருந்துவந்த பணத்தட்டுப்பாடுகள் குறையும். விளையாட்டுகளில் விழிப்புணர்வு வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : துரிதம் உண்டாகும்.
சுவாதி : பணத்தட்டுப்பாடுகள் குறையும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️விருச்சகம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்

வாடிக்கையாளர்களுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்விற்கான சுபச்செய்திகள் கிடைக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டப்படுவீர்கள். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அனுஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.


🕉️தனுசு
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்

வியாபாரத்தில் இலாபமும், பொருள் வரவும் உண்டாகும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வீடு தொடர்பான பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : பொருள் வரவுகள் மேம்படும்.
பூராடம் : தீர்வு கிடைக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️மகரம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்

எழுத்துக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதார உயர்வு உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : உயர்வு உண்டாகும்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அவிட்டம் : முயற்சிகள் மேம்படும்.


🕉️கும்பம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்
வாக்குவன்மையால் எண்ணிய செயல்பாடுகளில் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : அனுகூலம் ஏற்படும்.
சதயம் : கலகலப்பான நாள்.
பூரட்டாதி : சாமர்த்தியம் உண்டாகும்.


🕉️மீனம்
டிசம்பர் 15, 2020
கார்த்திகை 30 – செவ்வாய்
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் மேம்படும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முக்கியமான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் தொடர்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
பூரட்டாதி : இலாபம் மேம்படும்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரேவதி : மனவருத்தங்கள் நீங்கும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.