ஏப்ரல் 6 2022 தின ராசி பலன்கள்

டிசம்பர் 20 மார்கழி 05 ராசி பலன்

டிசம்பர் 20 மார்கழி 05 ராசி பலன்

டிசம்பர் 20 மார்கழி 05 ராசி பலன்

🗓️20-12-2021⏳
🌼திங்கட்கிழமை🌼

🕉️மேஷம்
டிசம்பர் 20, 2021

சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு முயற்சிக்கு ஏற்ப இருக்கும். மனதில் நிம்மதியும், திருப்தியான சூழலும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : திருப்தியான நாள்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 20, 2021

சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : நன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.


🕉️மிதுனம்
டிசம்பர் 20, 2021

விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். சுபமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.


🕉️கடகம்
டிசம்பர் 20, 2021

நீண்ட காலமாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஏற்பட்ட தடைகளால் புதிய மாற்றங்கள் பிறக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : வரவுகள் கிடைக்கும்.
பூசம் : மாற்றங்கள் பிறக்கும்.
ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 20, 2021

வியாபாரத்தில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். கனிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : லாபம் மேம்படும்.
பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரம் : சாதகமான நாள்.


🕉️கன்னி
டிசம்பர் 20, 2021

ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் உதவிகள் கிடைக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
அஸ்தம் : இலக்குகள் பிறக்கும்.
சித்திரை : மாற்றம் உண்டாகும்.


🕉️துலாம்
டிசம்பர் 20, 2021

பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை மேற்கொள்வீர்கள். சபைகள் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : காலதாமதம் ஏற்படும்.
விசாகம் : அறிவு மேம்படும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 20, 2021

மனைவி வழி உறவினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம். வாகனம் தொடர்பான விஷயங்களில் விரயங்கள் ஏற்படலாம். மற்றவர்களை பற்றி கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். போட்டிகள்
நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : பொறுமை வேண்டும்.
அனுஷம் : விரயங்கள் ஏற்படலாம்.
கேட்டை : அனுபவம் உண்டாகும்.


🕉️தனுசு
டிசம்பர் 20, 2021

எதிர்பாலின மக்களால் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சந்தேக உணர்வுகளை தவிர்த்து சரியான முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : தீர்வு கிடைக்கும்.
பூராடம் : அறிமுகம் ஏற்படும்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.


🕉️மகரம்
டிசம்பர் 20, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : சிந்தனைகள் உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : தெளிவு ஏற்படும்.


🕉️கும்பம்
டிசம்பர் 20, 2021

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி சாதகமாகும். சிற்றின்ப செயல்பாடுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்ப்புகளை அறியும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : ஆசைகள் பிறக்கும்.
சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரட்டாதி : விரயங்கள் உண்டாகும்.


🕉️மீனம்
டிசம்பர் 20, 2021

செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மனை விருத்திக்கான சிந்தனைகள் மனதில் மேம்படும். சிறு வியாபாரம் தொடர்பான விஷயங்களில் காரியசித்தி உண்டாகும். வெற்றிகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
ரேவதி : காரியசித்தி உண்டாகும்.

இன்றைய பஞ்சாங்கம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.