டிசம்பர் 28 மார்கழி 13 ராசி பலன்

டிசம்பர் 21 மார்கழி 06 ராசி பலன்

டிசம்பர் 21 மார்கழி 06 ராசி பலன்

🗓️21-12-2021⏳
🔴செவ்வாய்கிழமை🌸

🕉️மேஷம்
டிசம்பர் 21, 2021

நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனதில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : பயணம் மேற்கொள்வீர்கள்.
கிருத்திகை : முடிவுகள் சாதகமாகும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 21, 2021

செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. தொழில் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அலுவலக ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
ரோகிணி : கனவுகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : லாபம் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 21, 2021

பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். அசதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : காலதாமதம் உண்டாகும்.
புனர்பூசம் : பிரச்சனைகள் தீரும்.


🕉️கடகம்
டிசம்பர் 21, 2021

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

புனர்பூசம் : விருப்பம் நிறைவேறும்.
பூசம் : வரவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 21, 2021

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு நீடிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.


🕉️கன்னி
டிசம்பர் 21, 2021

பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வேலை விஷயமாக நல்ல செய்திகள் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
அஸ்தம் : உதவி கிடைக்கும்.
சித்திரை : ஆதரவான நாள்.


🕉️துலாம்
டிசம்பர் 21, 2021

பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பயணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 21, 2021

சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : பிரச்சனைகள் நீங்கும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : நட்பு கிடைக்கும்.


🕉️தனுசு
டிசம்பர் 21, 2021

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. சிந்தனைகளில் கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.


🕉️மகரம்
டிசம்பர் 21, 2021

மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்த செயலையும் மேற்கொள்வீர்கள். முயற்சிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : ஆதாயம் ஏற்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️கும்பம்
டிசம்பர் 21, 2021

நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சூழல் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு சாதகமாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் சார்ந்த புதுமையான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.


🕉️மீனம்
டிசம்பர் 21, 2021

அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். மனதில் எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். தொழில் ரீதியான நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். சுபமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
ரேவதி : விழிப்புணர்வு வேண்டும்.

இன்றைய பஞ்சாங்கம்

உங்கள் ஜாதகம் கணிக்க / பலன் பார்க்க

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.